Thiruppugazh aththan annai
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் அத்தன் அன்னை (சிதம்பரம்) சிதம்பர முருகா! பிறவித் துன்பம் நீங்க அருள். தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய ...... தனதான அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி அத்தை நண்ணு செல்வ ...... ருடனாகி அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல லற்று நின்னை வல்ல ...... படிபாடி முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி முத்த னென்ன வுள்ள ...... முணராதே முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு முட்ட னிங்ங னைவ ...... தொழியாதோ தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு தித்து மன்னு பிள்ளை ...... முருகோனே சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய சித்ர வண்ண வல்லி ...... யலர்சூடும் பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளி பத்தர் கன்னி புல்லு ...... மணிமார்பா பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே. பதம் பிரித்தல் அத்தன் அன்னை இல்லம் வைத்த சொன்னம் வெள்ளி அத்தை நண்ணு செல்வர் ...... உடன்ஆகி , அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல் அற்று , நின்னை வல்ல ...... படிபாடி , முத்தன் என்ன , வல்லை அத்தன் என்ன