moola manthiram odal Thiruppugazh
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மூல மந்திரம் (பழநி) பழநியப்பா! மெய்யடியார் உறவை அருள் தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன ...... தனதான மூல மந்திர மோத லிங்கிலை யீவ திங்கிலை நேய மிங்கிலை மோன மிங்கிலை ஞான மிங்கிலை ...... மடவார்கள் மோக முண்டதி தாக முண்டப சார முண்டப ராத முண்டிடு மூக னென்றோரு பேரு முண்டருள் ...... பயிலாத கோல முங்குண வீன துன்பர்கள் வார்மை யும்பல வாகி வெந்தெழு கோர கும்பியி லேவி ழுந்திட ...... நினைவாகிக் கூடு கொண்டுழல் வேனை யன்பொடு ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு கூர்மை தந்தினி யாள வந்தருள் ...... புரிவாயே பீலி ...