Posts

Showing posts from 2021

Thiruppugazh #134 Eththanai kodi kodi

Image
எத்தனை கோடி  (வைத்தீசுரன் கோயில் - திருப்புள்ளிருக்குவேளூர்) முருகா! திருவடி இன்பத்தை அருள்வாய். ------------------ எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி யெத்தனை கோடி போன ...... தளவேதோ இப்படி மோக போக மிப்படி யாகி யாகி யிப்படி யாவ தேது ...... இனிமேலோ சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச் சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது சித்திர ஞான பாத ...... மருள்வாயே நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு பத்திர பாத நீல ...... மயில்வீரா பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே. --------------------------- eththanai kOdi kOdi vittuda lOdi yAdi eththanai kOdi pOnadh ...... aLavEdhO ippadi mOha bOgam ippadi yAgi yAgi ippadi yAvadhEdhu ...... inimElO chiththidil cheechi cheechi kuththira mAya mAyai sikkini lAyu mAyum ...... adiyEnai chiththini lAda

Thiruppugazh #133 kanaiththu adhirkkum

Image
திருத்தணிகை வேலா! உன்னை நினைந்து உருகும் ஆன்மாவாகிய இந்த தலைவியை உன்னுடன் சேர்த்து அருவாய். கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட ...... லொன்றினாலே கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு ...... திங்களாலே தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச ...... ரங்களாலே தகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச ...... ழங்கலாமோ தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம ...... டந்தைகேள்வா திருத்த ணிப்பதிக் குன்றின் மேற்றிகழ் ...... கந்தவேளே பனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய ...... மங்கைபாகா படைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள் ...... தம்பிரானே. kanaiththa dhirkkumip pongu kArkkadal ...... ondrinAlE kaRuththaRa sivath thangi vAyththezhu ...... thingaLAlE thani karuppuviR kondu veezhththa ...... sarangaLAlE thagaith thoruththiyeyth thingu yAkkai ...... sazhangalAmO thinaip punaththinai paNdukAththa ...... madandhai kELvA thiruththaNi padhi kundrin mEtrigazh ...... kandha vELE panaik karak kayath thaNdar pOtriya ...... mangai bAgA padaith thaLith thazhikkum thrimUrthigaL ...... thambirAnE.

Thiruppugazh #132 piraviyaana sadamirangi

Image
முருகா! ஞானமலர்களால் தேவரீரது திருவடியை வழிபட்டு, மோன நிலையை அடைந்து, நன்மை பெற அருள்வாய் பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து பிணிக ளான துயரு ழன்று ...... தடுமாறிப் பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்தி பிடிப டாத ஜனன நம்பி ...... யழியாதே நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த நளின பாத மெனது சிந்தை ...... யகலாதே நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி நலன தாக அடிய னென்று ...... பெறுவேனோ பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்று பொருநி சாச ரனைநி னைந்து ...... வினைநாடிப் பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து புளக மேவ தமிழ்பு னைந்த ...... முருகோனே சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல் சிலையி ராம னுடனெ திர்ந்து ...... சமராடிச் செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த சிறுவை மேவி வரமி குந்த ...... பெருமாளே. piRaviyAna jadam iRangi vazhi ilAdha thuRai seRindhu piNigaLAna thuyar uzhandru ...... thadumARip perugu theeya vinaiyi nondhu gathigaL thORu malai porundhi pidi padAdha janana nam

Thiruppugazh #131 kala kalenachchila

Image
முருகா! நாயடியேனை தேவரீரது அடியவர் திருக்கூட்டத்தில் சேர்த்து, திருவடியைத் தந்து அருள். கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ  தொழிவ துனைச்சிறி ...... துரையாதே கருவழிதத்திய மடுவ தனிற்புகு கடுநர குக்கிடை ...... யிடைவீழா உலகு தனிற்பல பிறவி தரித்தற வுழல்வது விட்டினி ...... யடிநாயேன் உனதடி மைத்திரள் அதனினு முட்பட வுபய மலர்ப்பத ...... மருள்வாயே குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட நிசிசர னைப்பொரு ...... மயில்வீரா குணதர வித்தக குமர புனத்திடை குறமக ளைப்புணர் ...... மணிமார்பா அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு மணிதிரு வக்கரை ...... யுறைவோனே அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன அவைதரு வித்தருள் ...... பெருமாளே. ########################### kala kalena sila kalaigaL pidhatruvadh ozhivadh unai siRidh ...... uRaiyAdhE karuvazhi thaththiya maduva thaniR pugu kadu naraguk idai ...... idaiveezhA ulagu thaniR pala piRavi dharith aRa uzhal vadhu vittini ...... adinAyEn unadhadi maith thiraL adhaninum utpada ubaya malarp padham ...... aruLvAyE kulagiri pottezha alai kadal v

Thiruppugazh #130 alasal-adaindha

Image
வள்ளிமலை யாண்டவனே! என் புதல்விக்கு உனது கடப்ப மலர் மாலையைக் கொடுத்தருள்வீர். -------------------------------------- அல்லசல டைந்த வில்லடல நங்கன் அல்லிமல ரம்பு ...... தனையேவ அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற லையமது கிண்ட ...... அணையூடே சொல்லுமர விந்த வல்லிதனி நின்று தொல்லைவினை யென்று ...... முனியாதே துய்யவரி வண்டு செய்யமது வுண்டு துள்ளியக டம்பு ...... தரவேணும் கல்லசல மங்கை யெல்லையில்வி ரிந்த கல்விகரை கண்ட ...... புலவோனே கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று கல்லலற வொன்றை ...... யருள்வோனே வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச வல்லமைதெ ரிந்த ...... மயில்வீரா வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று வள்ளியைம ணந்த ...... பெருமாளே. -------------------------------------- allasala daintha villadala nangan allimala rampu ...... thanaiyEva aLLiyeri sintha piLLaimathi thenRa laiyamathu kiNda ...... aNaiyUdE sollumara vintha vallithani ninRu thollaivinai yenRu ...... muniyAthE thuyyavari vaNdu seyyamathu vuNdu thuLLiyaka dampu ...... tharavENum kallasala mangai ye

Thiruppugazh #129 kadalai pori avarai

Image
விநாயகமூர்த்தியின் துணைவரே! மயில் வாகனரே! கஜவல்லி வனவல்லி சமேதரே! அசுரரை அழித்து தேவர் சிறைமீட்ட வேற்படையினரே! சரவணபவ! சிவமூர்த்திக்கும், சுரநதிக்கும், கௌரியம்மைக்கும் திருப்புதல்வரே!  பழனாபுரிப் பெருமாளே! கடலை பொரியவரை பலக னிகழைநுகர் கடின குடவுதர ...... விபரீத கரட தடமுமத நளின சிறுநயன கரிணி முகவரது ...... துணைவோனே வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில் வலம்வ ருமரகத ...... மயில்வீரா மகப திதருசுதை குறமி னொடிருவரு மருவு சரசவித ...... மணவாளா அடல சுரர்கள்குல முழுது மடியவுய ரமரர் சிறையைவிட ...... எழில்மீறும் அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு மரக ரசரவண ...... பவலோலா படல வுடுபதியை யிதழி யணிசடில பசுப திவரநதி ...... அழகான பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை பழநி மலையில்வரு ...... பெருமாளே. ------------------------------------ kadalai poriyavarai palaka nikazhainugar kadina kudaudhara ...... vipareetha karada thadamumadha naLina siRunayana kariNi mukavaradhu ...... thuNaivOnE vadava raiyinmugadu adhira orunodiyil valamva rumarakatha ...... mayilveerA mag

Thiruppugazh #128 kariya periya

Image
காலன் வருமுன் திருவடி தரிசனத்தைப் பெறவேணும். கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய ...... திரிசூலன் கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள் கழிய முடுகி ...... யெழுகாலந் திரியு நரியு மெரியு முரிமை தெரிய விரவி ...... யணுகாதே செறிவு மறிவு முறவு மனைய திகழு மடிகள் ...... தரவேணும் பரிய வரையி னரிவை மருவு பரம ரருளு ...... முருகோனே பழன முழவர் கொழுவி லெழுது பழைய பழநி ...... யமர்வோனே அரியு மயனும் வெருவ வுருவ அரிய கிரியை ...... யெறிவோனே அயிலு மயிலு மறமு நிறமும் அழகு முடைய ...... பெருமாளே -------------------------- kariya periya erumai kadavu kadiya kodiya ...... thirisUlan kaRuvi iRugu kayiRo duyirgaL kazhiya mudugi ...... ezhukAlan thiriyu nariyum eriyum urimai theriya viravi ...... aNugAdhE seRivum aRivum uRavum anaiya thigazhum adigaL ...... tharavENum pariya varaiyin arivai maruvu paramar aruLu ...... murugOnE pazhana muzhavar kozhuvil ezhudhu pazhaiya pazhani ...... amarvOnE ariyum ayanum veruva uruva ariya giriyai ...... eRivOnE ayil

Thiruppugazh #127

Image
திருத்தணிகை வேலா! கீழ்மக்களைப் பாடி வாடாமல், உன்னையே பாடி உய்ய அருள் சொரியு முகிலைப் பதும நிதியைச்  சுரபி தருவைச் ...... சமமாகச் சொலியு மனமெட் டனையு நெகிழ்விற் சுமட ரருகுற் ...... றியல்வாணர் தெரியு மருமைப் பழைய மொழியைத் திருடி நெருடிக் ...... கவிபாடித் திரியு மருள்விட் டுனது குவளைச் சிகரி பகரப் ...... பெறுவேனோ கரிய புருவச் சிலையும் வளையக் கடையில் விடமெத் ...... தியநீலக் கடிய கணைபட் டுருவ வெருவிக் கலைகள் பலபட் ...... டனகானிற் குரிய குமரிக் கபய மெனநெக் குபய சரணத் ...... தினில்வீழா உழையின் மகளைத் தழுவ மயலுற் றுருகு முருகப் ...... பெருமாளே. ---------------------- soriyu mukilaip pathuma nithiyaic s urapi tharuvaic ......  s amamAkac s oliyu manamet tanaiyu nekizhviR sumada rarukut ...... RiyalvANar theriyu marumaip pazhaiya mozhiyaith thirudi nerudik ...... kavipAdith thiriyu maruLvit tunathu kuvaLaic s ikari pakarap ...... peRuvEnO kariya puruvac  s ilaiyum vaLaiyak kadaiyil vidameth ...... thiyaneelak kadiya kaNaipat turuva veruvik

Thiruppugazh #126 kolai madha

Image
மாதர் மயக்கத்தை விட்டு,  திருவருள் நெறியில் நின்று திருவடி பெற கொலைமத கரியன ம்ருகமத தனகிரி கும்பத் ...... தனமானார் குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல் கொண்டுற் ...... றிடுநாயேன் நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழி நின்றுற் ...... றிடவேதான் நினதிரு வடிமல ரிணைமன தினிலுற நின்பற் ...... றடைவேனோ சிலையென வடமலை யுடையவர் அருளிய செஞ்சொற் ...... சிறுபாலா திரைகட லிடைவரும் அசுரனை வதைசெய்த செந்திற் ...... பதிவேலா விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்வி ரும்பிப் ...... புணர்வோனே விருதணி மரகத மயில்வரு குமரவி டங்கப் ...... பெருமாளே ----------------------------------------- kolaimatha kariyana mrukamatha thanakiri kumpath ...... thanamAnAr kumuthA muthaithazh parukiyu rukimayal koNdut ...... RidunAyEn nilaiyazhi kavalaikaL kedavuna tharuLvizhi ninRut ...... RidavEthAn ninathiru vadimala riNaimana thiniluRa ninpat ...... RadaivEnO silaiyena vadamalai yudaiyavar aruLiya senjoR ...... siRupAlA thiraikada lidaivarum asuranai vathaiseytha senthiR ..

Sangu Abhishekam 2021

Image
Sangu Abhishekam 2021 Last Monday of Karthigai month, worshiping Lord Sarveshwara through paasupatha astra homam and Sangu abhishekam Date: December 13, Monday. 9.00 am to 12.30 pm Benefits : graha dosha nivaranam Atonement of sins committed unknowingly Puja donations : Rs.300/- for sankalpam Rs.1.,000/- for sangu prasadam For registration, https://www.chinmayasarveshwara.com/p/registration-form.html Contact : 95660 56993 --------------------------------------------- சங்கு அபிஷேகம் 2021 கார்த்திகை மாதம் கடைசி சோமவாரம் பாசுபத அஸ்திரம் ஹோமம் மற்றும் சங்கு அபிஷேகம் டிசம்பர் 13, திங்கட்கிழமை காலை 9.00 முதல் மதியம் 12.30 வரை பலன்கள் : கிரஹ தோஷ நிவாரணம் அறியாமல் செய்த பாவங்கள் விலகும் நன்கொடை Rs.300/- சங்கல்பத்கிற்கு Rs.1000/- சங்கு பிரசாதத்திற்கு பதிவு செய்ய, https://www.chinmayasarveshwara.com/p/registration-form.html தொடர்புக்கு 95660 56993

Thiruppugazh #125 surumpani kondal

Image
விளங்குகின்ற உனது கடப்ப மாலையை விரும்பி,  அழகிய தண்டையையும்,  பல இன்னிசை வகைகளை ஒலிக்கும் கிண்கிணியையும் அணிந்த திருவடிகளைத் தருவாயாக. சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு துரந்தெறி கின்ற ...... விழிவேலால் சுழன்றுசு ழன்று துவண்டுது வண்டு சுருண்டும யங்கி ...... மடவார்தோள் விரும்பிவ ரம்பு கடந்துந டந்து மெலிந்துத ளர்ந்து ...... மடியாதே விளங்குக டம்பு விழைந்தணி தண்டை விதங்கொள்ச தங்கை ...... யடிதாராய் பொருந்தல மைந்து சிதம்பெற நின்ற பொலங்கிரி யொன்றை ...... யெறிவோனே புகழ்ந்தும கிழ்ந்து வணங்குகு ணங்கொள் புரந்தரன் வஞ்சி ...... மணவாளா இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய் குரும்பைம ணந்த ...... மணிமார்பா இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று இலஞ்சிய மர்ந்த ...... பெருமாளே. ------------------------ surumpaNi koNdal nedungkuzhal kaNdu  thurantheRi kinRa ...... vizhivElAl suzhanRusu zhanRu thuvaNduthu vaNdu suruNduma yangi ...... madavArthOL virumpiva rampu kadanthuna danthu melinthutha Larnthu ...... madiyAthE viLanguka dampu vizhainthaNi thaNdai vithangko

Thiruppugazh #124 indhu kadhir

Image
முருகா! சிவஞான தரிசனம் அருள்வாய் இந்துகதிர்ச் சேரருணப் பந்திநடுத் தூணொளிபட் டின்பரசப் பாலமுதச் ...... சுவைமேவு எண்குணமுற் றோனடனச் சந்த்ரவொளிப் பீடகமுற் றெந்தைநடித் தாடுமணிச் ...... சபையூடே கந்தமெழுத் தோடுறுசிற் கெந்தமணப் பூவிதழைக் கண்டுகளித் தேயமுதக் ...... கடல்மூழ்கிக் கந்தமதித் தாயிரவெட் டண்டமதைக் கோல்புவனக் கண்டமதைக் காணஎனக் ...... கருள்வாயே திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட் டிந்தமெனக் காளமணித் ...... தவிலோசை சிந்தைதிகைத் தேழுகடற் பொங்கவரிச் சூர்மகுடச் செண்டுகுலைத் தாடுமணிக் ...... கதிர்வேலா குந்தியரித் தாழ்துளபச் செந்திருவைச் சேர்களபக் கொண்டல்நிறத் தோன்மகளைத் ...... தரைமீதே கும்பிடகைத் தாளமெடுத் தம்பொனுருப் பாவைபுகழ்க் கும்பகொணத் தாறுமுகப் ...... பெருமாளே. #################### inthukathirc cEraruNap panthinaduth thUNoLipat tinparasap pAlamuthac ...... cuvaimEvu eNkuNamuR ROnadanac canthravoLip peedakamuR Renthainadith thAdumaNic ...... capaiyUdE kanthamezhuth thOduRusiR kenthamaNap pUvithazhaik kaNdukaLith thEyamuthak

Thiruppugazh #123 dhAmA dhAmA lAbhA

Image
முருகா! அவமே அழியாமல் ஆண்டு அருள் தாமா தாமா லாபா லோகா  தாரா தாரத் ...... தரணீசா தானா சாரோ பாவா பாவோ நாசா பாசத் ...... தபராத யாமா யாமா தேசா ரூடா யாரா யாபத் ...... தெனதாவி யாமா காவாய் தீயே னீர்வா யாதே யீமத் ...... துகலாமோ காமா காமா தீனா நீணா காவாய் காளக் ...... கிரியாய்கங் காளா லீலா பாலா நீபா காமா மோதக் ...... கனமானின் தேமார் தேமா காமீ பாகீ தேசா தேசத் ...... தவரோதுஞ் சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே. ###################### thAmA thAmA lAbA lOkA thArA thArath ...... tharaNeesA thAnA sArO bAvA pAvO nAsA pAsath ...... thaparAtha yAmA yAmA thEsA rUdA yArA yApath ...... thenathAvi yAmA kAvAy theeyE neervA yAthE yeemath ...... thukalAmO kAmA kAmA theenA neeNA kAvAy kALak ...... kiriyAykang kALA leelA bAlA neepA kAmA mOthak ...... kanamAnin thEmAr thEmA kAmee pAkee thEsA thEsath ...... thavarOthum sEyE vELE pUvE kOvE thEvE thEvap ...... perumALE.

Thiruppugazh #122 anaivaru maruNda

Image
வள்ளி மணவாளரே!  செந்திலாண்டவரே!  குறிஞ்சிக் கிழவரே!  தொழுநோய் தொடர்ந்து அழியாமல்  உமது திருவடியைத் தொழ அருள்புரிவீர். அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப அமரஅ டிபின்தொ டர்ந்து ...... பிணநாறும் அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்பு மவலவுட லஞ்சு மந்து ...... தடுமாறி மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி மனவழி திரிந்து மங்கும் ...... வசைதீர மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கை கொஞ்சு மலரடி வணங்க என்று ...... பெறுவேனோ தினைமிசை சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பை திகழிரு தனம்பு ணர்ந்த ...... திருமார்பா ஜெகமுழு துமுன்பு தும்பி முகவனொ டுதந்தை முன்பு திகிரிவ லம்வந்த செம்பொன் ...... மயில்வீரா இனியக னிமந்தி சிந்து மலைகிழ வசெந்தில் வந்த இறைவகு ககந்த என்று ...... மிளையோனே எழுகட லுமெண்சி லம்பும் நிசிசர ருமஞ்ச அஞ்சு மிமையவ ரையஞ்ச லென்ற ...... பெருமாளே. ------------------------ anaivaru maruNda ruNdu kadithena vegunNdi yamba amara a dipintho darnthu ...... piNanARum azhugupiNi koNdu viNdu puzhuvuda nelumba lambu mavalavu dalanju ma

Thiruppugazh #121 naasarthang kadaiyadhanil

Image
சுவாமிநாதா! கீழ்மக்களோடு கூடாமல்,  உமது திருவடி பணிந்து உய்ய அருள். நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து ...... தடுமாறி ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி ...... மெலியாதே மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து ...... சுகமேவி மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று ...... பணிவேனோ வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற ...... குருநாதா வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு ...... மணவாளா கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து ...... புடைசூழுங் கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த ...... பெருமாளே. ############### nAsar tham kadaiyadhanil viravi nAn meththa nondhu ...... thadumARi nyAnamum keda adaiya vazhuviyA zhaththa zhundhi ...... meliyAdhE mA jagam thozhum unadhu pugazhinOr soR pagarndhu ...... sukamEvi mA maNam kamazhum iru kamala pAdhaththai nindru ...... paNivEnO vAchakam pugala oru paramar thA mechchukindra ...... gurunathA vAsavan tharu thiruvai oru dheyvA naikki rangu ...... maNavALA keechakan surartharuvu magizhumA aththi sandhu ...... pudai

Thiruppugazh #120 neelamkol

Image
உன்மீது ஆசை கொண்ட இந்தப் பெண்ணுக்கு, உனது நறுமணம் மிக்க மார்பில் தங்கி விளங்கும் மாலையைத் தந்து அருள்புரிவாயாக. நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும் மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா நாலந்த வேதத்தின் ...... பொருளோனே நானென்று மார்தட்டும் ...... பெருமாளே. ######################### neelang koL mEgaththin ...... mayilmeedhE nee vandha vAzhvaik ...... kaNdadhanAlE mAl koNda pEdhaikkun ...... maNanARum mAr thangu thAraiththandh ...... aruLvAyE vEl koNdu vElaip paNd ...... eRivOnE veerang koL sUrarkkung ...... kulakAlA nAl andha vEdhaththin ...... poruLOnE nAn endru mAr thattum ...... perumALE.

Thiruppugazh #119 ola maraigal

Image
முருகா! பொறி புலன்களால் துன்புற்று வாடாமல், ஒப்பற்ற உனது திருவடியை அடைந்து இன்புற அருள் ஓல மறைக ளறைகின்ற வொன்றது மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர் ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ ...... ரெவராலும் ஓத வரிய துரியங் கடந்தது போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும் ஊனு முயிரு முழுதுங் கலந்தது ...... சிவஞானம் சால வுடைய தவர்கண்டு கொண்டது மூல நிறைவு குறைவின்றி நின்றது சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ ...... னவியோமஞ் சாரு மநுப வரமைந்த மைந்தமெய் வீடு பரம சுகசிந்து இந்த்ரிய தாப சபல மறவந்து நின்கழல் ...... பெறுவேனோ வால குமர குககந்த குன்றெறி வேல மயில எனவந்து கும்பிடு வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் ...... களைவோனே வாச களப வரதுங்க மங்கல வீர கடக புயசிங்க சுந்தர வாகை புனையும் ரணரங்க புங்கவ ...... வயலூரா ஞால முதல்வி யிமயம் பயந்தமின் நீலி கவுரி பரைமங்கை குண்டலி நாளு மினிய கனியெங்க ளம்பிகை ...... த்ரிபுராயி நாத வடிவி யகிலம் பரந்தவ ளாலி னுதர முளபைங் கரும்புவெ ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் ...... பெருமாளே. ##

Thiruppugazh #118 por-padhaththinai

Image
திருத்தணிகை வேலா! பிறவித் துன்பத்தை அகற்றி, முத்தி நலம் அருளும் நாள் என்று வரும்? பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர் பொற்பு ரைத்து நெக்கு ருக்க ...... அறியாதே புத்த கப்பி தற்றை விட்டு வித்த கத்து னைத்து திக்க புத்தி யிற்க லக்க மற்று ...... நினையாதே முற்ப டத்த லத்து தித்து பிற்ப டைத்த கிர்த்ய முற்றி முற்க டைத்த வித்து நித்த ...... முழல்வேனை முட்ட விக்க டைப்பி றப்பி னுட்கி டப்ப தைத்த விர்த்து முத்தி சற்றெ னக்க ளிப்ப ...... தொருநாளே வெற்ப ளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த வித்த கத்தர் பெற்ற கொற்ற ...... மயில்வீரா வித்தை தத்வ முத்த மிழ்ச்சொ லத்த சத்தம் வித்த ரிக்கு மெய்த்தி ருத்த ணிப்பொ ருப்பி ...... லுறைவோனே கற்ப கப்பு னக்கு றத்தி கச்ச டர்த்த சித்ர முற்ற கற்பு ரத்தி ருத்த னத்தி ...... லணைவோனே கைத்த ரக்கர் கொத்து கச்சி னத்து வஜ்ர னுக்க மைத்த கைத்தொ ழுத்த றித்து விட்ட ...... பெருமாளே. ################################ poRpadhaththinai thudhiththu naRpadhaththil utrabakthar poRpu raiththu nekku rukka ...... aRiyAdhE puththaga

Thiruppugazh #117 isaindha erum

Image
முருகா! என் உயிர் கொண்டு செல்லும் சமயம் நான் அயரும்போது எனது துயரங்கள் நீங்குமாறு சிறந்த மயில் மேல் நீ வந்தருள வேண்டும். இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் ...... எழில்நீறும் இலங்கு நூலும் புலியத ளாடையு ...... மழுமானும் அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு ...... முடிமீதே அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய ...... குருநாதா உசந்த சூரன் கிளையுடன் வேரற ...... முனிவோனே உகந்த பாசங் கயிறொடு தூதுவர் ...... நலியாதே அசந்த போதென் துயர்கெட மாமயில் ...... வரவேணும் அமைந்த வேலும் புயமிசை மேவிய ...... பெருமாளே. ############### isaindha ERum kariyuri pOrvaiyum ...... ezhilneeRum ilangu nUlum puliyadhaL Adaiyu ...... mazhumAnum asaindha thOdum siramaNi mAlaiyu ...... mudimeedhE aNindha eesan parivudan mEviya ...... gurunAthA usandha sUran kiLaiyudan vEraRa ...... munivOnE ugandha pAsam kayiRodu dhUthuvar ...... naliyAdhE asandha pOdhen thuyarkeda mAmayil ...... varavENum amaindha vElum buyamisai mEviya ...... perumALE.

Thiruppugazh #116 kurudhi pulaal

Image
முருகா! ஐம்புல வேடரால் வளர்ந்து அழியாமல், பேரின்ப வீட்டினை அடைய அருள். குருதிபு லாலென்பு தோன ரம்புகள்  கிருமிகள் மாலம்பி சீத மண்டிய குடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பன ...... பொதிகாயக் குடிலிடை யோரைந்து வேட ரைம்புல அடவியி லோடுந்து ராசை வஞ்சகர் கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய ...... அதனாலே சுருதிபு ராணங்க ளாக மம்பகர் சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை துதியொடு நாடுந்தி யான மொன்றையு ...... முயலாதே சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய துரிசற ஆநந்த வீடு கண்டிட ...... அருள்வாயே ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும் நிருதரு மாவுங்க லோல சிந்துவும் உடைபட மோதுங்கு மார பங்கய ...... கரவீரா உயர்தவர் மாவும்ப ரான அண்டர்கள் அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள் உளமதில் நாளுங் கு  லாவி யின்புற ...... வுறைவோனே கருதிய ஆறங்க வேள்வி யந்தணர் அரிகரி கோவிந்த கேச வென்றிரு கழல்தொழு சீரங்க ராச னண்புறு ...... மருகோனே கமலனு மாகண்ட லாதி யண்டரு மெமது பிரானென்று தாள்வ ணங்கிய கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்

Thiruppugazh #115 variyAr karungkaN

Image
பாசபந்தத்தினால் மெலியாமல், சரணாரவிந்தத்தில் மகிழ வரியார் கருங்கண் ...... மடமாதர் மகவா சைதொந்த ...... மதுவாகி இருபோ துநைந்து ...... மெலியாதே இருதா ளினன்பு ...... தருவாயே பரிபா லனஞ்செய் ...... தருள்வோனே பரமே சுரன்ற ...... னருள்பாலா அரிகே சவன்றன் ...... மருகோனே அலைவா யமர்ந்த ...... பெருமாளே. ########################## variyAr karungkaN ...... madamAdhar magavA saithondha ...... madhuvAgi irupO dhunaindhu ...... meliyAdhE iruthA Linanbu ...... tharuvAyE paripA lanamsey ...... dharuLvOnE paramE suranthan ...... aruLbAlA arikE savanthan ...... marugOnE alaivAy amarndha ...... perumALE.

Thiruppugazh #114 aangudal valaindhu

Image
முருகா! இம்மையில் வேண்டிய பதங்கள் தந்து, மறுமையில் திருவடியை அருள்வாய் ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து ஆய்ஞ்சுதளர் சிந்தை ...... தடுமாறி ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து ஆண்டுபல சென்று ...... கிடையோடே ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து ஓய்ந்துணர் வழிந்து ...... உயிர்போமுன் ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து ஊன்றிய பதங்கள் ...... தருவாயே வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த வேந்திழையி னின்ப ...... மணவாளா வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச வேண்டிய பதங்கள் ...... புரிவோனே மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து மாண்புநெல் விளைந்த ...... வளநாடா மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற மாந்துறை யமர்ந்த ...... பெருமாளே. ###################### Ang kudal vaLaindhu neengu pal negizhndhu Aynju thaLar chinthai ...... thadumARi ArndhuLa kadangaL vAngavu maRindhu ANdu pala sendru ...... kidaiyOdE Ungirumal vandhu veengu kudal nondhu OyndhuNar vazhindhu ...... uyir pOmun Ongu mayil vandhu sENpera isaindhu Undriya padhangaL ...... tharuvAyE vEngaiyum uyarnd

Thiruppugazh #113 naadi thedi

Image
முருகா! அடியார்களோடு கூடி இருந்த ஞானவாழ்வினை அடைய அருள் நாடித் தேடித் ...... தொழுவார்பால் நானத் தாகத் ...... திரிவேனோ மாடக் கூடற் ...... பதிஞான வாழ்வைச் சேரத் ...... தருவாயே பாடற் காதற் ...... புரிவோனே பாலைத் தேனொத் ...... தருள்வோனே ஆடற் றோகைக் ...... கினியோனே ஆனைக் காவிற் ...... பெருமாளே. ###################### nAdith thEdith ...... thozhuvAr pAl nAnath thAgath ...... thirivEnO mAdak kUdaR ...... pathi nyAna vAzhvai sErath ...... tharuvAyE pAdaR kAdhal ...... purivOnE pAlaith thEnoth ...... aruLvOnE AdaR thOgaik ...... iniyOnE Anai kAviR ...... perumALE.

Thiruppugazh #112 ari-ayan ariyaadhavar

Image
சிவகுமாரரே! எனது பாதக மலங்கள் அகல, அடியேன் தேவரீரது திருப்பாத கமலங்களைத் தொழுது உய்யத் திருவருள் புரிவீர். அரியய னறியா தவரெரி புரமூ ணதுபுக நகையே ...... வியநாதர் அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ றழலையு மழுநேர் ...... பிடிநாதர் வரைமக ளொருகூ றுடையவர் மதனா கமும்விழ விழியே ...... வியநாதர் மனமகிழ் குமரா எனவுன திருதாள் மலரடி தொழுமா ...... றருள்வாயே அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல் அவனியை வலமாய் ...... வருவோனே அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல் அயில்தனை விசையாய் ...... விடுவோனே வரிசையொ டொருமா தினைதரு வனமே மருவியொர் குறமா ...... தணைவேடா மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர் வருதவ முநிவோர் ...... பெருமாளே. ######################## ariyayan aRiyA dhavar eripuramUN adhupuga nagai yEviya ...... nAthar avirsadai misaiyOr vanithaiyar pathi seeR azhalaiyu mazhu nEr ...... pidinAthar varai magaLoru kUR udaiyavar madhanA gamum vizha vizhi ...... yEviya nAthar manamagizh kumarA enavuna dhiru thAL malaradi thozhumAR ...... aruLvAyE aruvarai irukURida

Thiruppugazh #111 karuvenum maayai

Image
முருகா! உன் அடியார்களை வாழச்செய்ய அருள்பவனே, அற்பத்தனமாக நான் உழன்று திரிதல் தகுமோ? கருவெனு மாயை உருவினில் மூழ்கி  வயதள வாக ...... நிலமீதில் கலைதெரி வாணர் கலைபல நூல்கள் வெகுவித மாக ...... கவிபாடித் தெருவழி போகி பொருளெனு மாசை திரவியம் நாடி ...... நெடிதோடிச் சிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கி சிறுவித மாக ...... திரிவேனோ அருளநு போக குருபர னேஉன் அடியவர் வாழ ...... அருள்வோனே அரனிரு காதில் அருள்பர ஞாந அடைவினை ஓதி ...... அருள்பாலா வெருவிடு சூரர் குலஅடி வேரை விழவிடு சாசு ...... வதிபாலா மிடலுட லாளர் அடரசுர் மாள விடுமயில் வேல ...... பெருமாளே ################ karuvenu mAyai uruvinil mUzhki vayathaLa vAka ...... nilameethil kalaitheri vANar kalaipala nUlkaL vekuvitha mAka ...... kavipAdith theruvazhi pOki poruLenu mAsai thiraviyam nAdi ...... nedithOdi silainuthal mAthar mayalinil mUzhki siRuvitha mAka ...... thirivEnO aruLanu pOka gurupara nEun adiyavar vAzha ...... aruLvOnE araniru kAthil aruLpara njAna adaivinai Othi ...... aruLbAlA veruvidu cUrar kulAdi vErai v

Thiruppugazh #110 ari marigone

Image
முருகா! உபதேசப் பொருளாலே, உன்னை நான் நினைந்து அருள் பெறவேண்டும். அரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென் றறுமுக வேளே நமோவென் ...... றுனபாதம் அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென் றருண சொரூபா நமோவென் ...... றுளதாசை பரிபுர பாதா சுரேசன் றருமக ணாதா வராவின் பகைமயில் வேலா யுதாடம் ...... பரநாளும் பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன் பதிபசு பாசோப தேசம் ...... பெறவேணும் கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங் கடினசு ராபான சாமுண் ...... டியுமாடக் கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனா பதீயென் களமிசை தானேறி யேயஞ் ...... சியசூரன் குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங் குடல்கொள வேபூச லாடும் ...... பலதோளா குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங் குளிர்வய லூரார மேவும் ...... பெருமாளே. ########################## arimaru gOnE namOvendr aRudhiyi lAnE namOvendr aRumuga vELE namOvendr ...... una pAdham arahara sEyE namOvendr imayavar vAzhvE namOvendr aruNa sorUpA namOvendr ...... uLadhAsai paripura pAdhA surEsan tharumagaL nAthA varAvin

Thiruppugazh #109 karuvin uruvaagi

Image
முருகா! அடியேன் பிறந்து, கலைகள் பல தெரிந்து, மதனனால் கருத்து அழிந்து, சிவநாமங்களை நினையாமல், ஆக்கைக்கே இரை தேடி உழலாமல் ஆண்டருள்வீர். கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து  கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று அறுசமய நீதி யொன்று ...... மறியாமல் அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர் உலகளவு மால்ம கிழ்ந்த ...... மருகோனே உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க உறைபுகலி யூரி லன்று ...... வருவோனே பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற பரமனரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே. ####################### karuvinuru vAgi vandhu vayadhaLavi lEva Larndhu kalaigaLpala vEthe rindhu ...... madhanAlE kariyakuzhal mAdhar thangaL adisuvadu mArbu dhaindhu kavalaiperi dhAgi nondhu ...... m

Thiruppugazh #108 vidam-adaisu

Image
விடமடைசு வேலை அமரர்படை சூலம் விசையன்விடு பாண ...... மெனவேதான் விழியுமதி பார விதமுமுடை மாதர் வினையின்விளை வேதும் ...... அறியாதே கடியுலவு பாயல் பகலிரவெ னாது கலவிதனில் மூழ்கி ...... வறிதாய கயவனறி வீனன் இவனுமுயர் நீடு கழலிணைகள் சேர ...... அருள்வாயே இடையர்சிறு பாலை திருடிகொடு போக இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே இதயமிக வாடி யுடையபிளை நாத கணபதியெ னாம ...... முறைகூற அடையலவர் ஆவி வெருவஅடி கூர அசலுமறி யாமல் ...... அவரோட அகல்வதென டாசொல் எனவுமுடி சாட அறிவருளும் ஆனை ...... முகவோனே. ######################## vidamadaisu vElai amararpadai cUlam  visaiyanvidu pANa ...... menavEthAn vizhiyumathi pAra vithamumudai mAthar vinaiyinviLai vEthum ...... aRiyAthE kadiyulavu pAyal pakalirave nAthu kalavithanil mUzhki ...... vaRithAya kayavanaRi veenan ivanumuyar needu kazhaliNaikaL sEra ...... aruLvAyE idaiyarsiRu pAlai thirudikodu pOka iRaivanmakaL vAymai ...... aRiyAthE ithayamika vAdi yudaiyapiLai nAtha kaNapathiye nAma ...... muRaikURa adaiya

Thiruppugazh #107 makaramodu uRai-kuzhai

Image
மகரமொ டுறுகுழை யோலை காட்டியு  மழைதவழ் வனைகுழல் மாலை காட்டியும் வரவர வரஇத ழூற லூட்டியும் ...... வலைவீசும் மகரவி ழிமகளிர் பாடல் வார்த்தையில் வழிவழி யொழுகுமு பாய வாழ்க்கையில் வளமையி லிளமையில் மாடை வேட்கையில் ...... மறுகாதே இகலிய பிரமக பால பாத்திர மெழில்பட இடுதிரு நீறு சேர்த்திற மிதழியை யழகிய வேணி யார்த்ததும் ...... விருதாக எழில்பட மழுவுடன் மானு மேற்றது மிசைபட இசைதரு ஆதி தோற்றமு மிவையிவை யெனவுப தேச மேற்றுவ ...... தொருநாளே ஜகதல மதிலருள் ஞான வாட்கொடு தலைபறி யமணர்ச மூக மாற்றிய தவமுனி சகமுளர் பாடு பாட்டென ...... மறைபாடி தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தாவெ னாச்சில சபதமொ டெழுவன தாள வாச்சிய ...... முடனேநீள் அகுகுகு குகுவென ஆளி வாய்ப்பல அலகைக ளடைவுட னாடு மாட்டமு மரனவ னுடனெழு காளி கூட்டமு ...... மகலாதே அரிதுயில் சயனவி யாள மூர்த்தனு மணிதிகழ் மிகுபுலி யூர்வி யாக்ரனு மரிதென முறைமுறை யாடல் காட்டிய ...... பெருமாளே. ################## makaramo duRukuzhai yOlai kAttiyu mazhait

Thiruppugazh #106 udukka thugil

Image
உடுக்கத் துகில்வேணு நீள்பசி  யவிக்கக் கனபானம் வேணுநல் ஒளிக்குப் புனலாடை வேணுமெய் ...... யுறுநோயை ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள் இருக்கச் சிறுநாரி வேணுமொர் படுக்கத் தனிவீடு வேணுமிவ் ...... வகையாவுங் கிடைத்துக் க்ருஹவாசி யாகிய மயக்கக் கடலாடி நீடிய கிளைக்குப் பரிபால னாயுயி ...... ரவமேபோம் க்ருபைச்சித் தமுஞான போதமு மழைத்துத் தரவேணு மூழ்பவ கிரிக்குட் சுழல்வேனை யாளுவ ...... தொருநாளே குடக்குச் சிலதூதர் தேடுக வடக்குச் சிலதூதர் நாடுக குணக்குச் சிலதூதர் தேடுக ...... வெனமேவிக் குறிப்பிற் குறிகாணு மாருதி யினித்தெற் கொருதூது போவது குறிப்பிற் குறிபோன போதிலும் ...... வரலாமோ அடிக்குத் திரகார ராகிய அரக்கர்க் கிளையாத தீரனு மலைக்கப் புறமேவி மாதுறு ...... வனமேசென் றருட்பொற் றிருவாழி மோதிர மளித்துற் றவர்மேல் மனோகர மளித்துக் கதிர்காம மேவிய ...... பெருமாளே. ################ udukka thugil vENu neeL pasi avikka ganapAnam vENunal oLikkup punalAdai vENu mey ...... uRunOyai ozhikkap parikA

Thiruppugazh #105 ekamaai palavaai

Image
ஏக மாய்ப்பல வாய்ச்சிவ போக மாய்த்தெளி வாய்ச்சிவ  மீதெ னாக்குரு வார்த்தையை ...... யுணராதே ஏழு பார்க்கும்வி யாக்கிரன் யானெ னாப்பரி தேர்க்கரி யேறு மாப்பிறு மாப்புட ...... னரசாகி தோகை மார்க்கொரு காற்றொலை யாத வேட்கையி னாற்கெடு சோர்வி னாற்கொடி தாக்கையை ...... யிழவாமுன் சோதி காட்டவ ராச்சுத நாத னார்க்கருள் போற்றிய தூரி தாப்பர மார்த்தம ...... தருள்வாயே நாக மேற்றுயில் வார்க்கய னான பேர்க்கரி யார்க்கொரு ஞான வார்த்தையி னாற்குரு ...... பரனாய நாத நாட்டமு றாப்பல காலும் வேட்கையி னாற்புகல் நாவ லோர்க்கரு ளாற்பத ...... மருள்வாழ்வே வேக மேற்கொ ளராப்புடை தோகை மேற்கொடு வேற்கொடு வீர மாக்குலை யாக்குல ...... வரைசாய மேலை நாட்டவர் பூக்கொடு வேல போற்றியெ னாத்தொழ வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே. #################### Eka mAyppala vAycciva pOka mAyththeLi vAycciva meethe nAkkuru vArththaiyai ...... yuNarAthE Ezhu pArkkumvi yAkkiran yAne nAppari thErkkari yERu mAppiRu mAppuda ...... narasAki thOkai mArkkoru kAtRolai yAtha vEtkaiyi nARkedu sOrvi nARkodi thAkkaiyai ...

Thiruppugazh #104 agalvinai utsaar

Image
முருகா! திருவடியைப் பற்ற அருள் வேண்டல் அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு      மறிவிலி வித்தா ரத்தன ...... மவிகார அகில்கமழ் கத்தூ ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள      வருள்பவர் நட்பே கொட்புறு ...... மொருபோதன் பகலிர விற்போ திற்பணி பணியற விட்டா ரெட்டிய      பரமம யச்சோ திச்சிவ ...... மயமாநின் பழநித னிற்போ யுற்பவ வினைவிள கட்சேர் வெட்சிகு      ரவுபயில் நற்றாள் பற்றுவ ...... தொருநாளே புகலிவ னப்பே றப்புகல் மதுரைமன் வெப்பா றத்திகழ்      பொடிகொடு புற்பாய் சுற்றிகள் ...... கழுவேறப் பொருதச மர்த்தா குத்திர துரகமு கக்கோ தைக்கிடை      புலவரில் நக்கீ ரர்க்குத ...... வியவேளே இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டருள்      எழுபுவி துய்த்தார் மைத்துனர் ...... மதலாய்வென் றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை      யெழுதிவ னத்தே யெற்றிய ...... பெருமாளே ############# agalvinai yutsAr satchama yikaLodu vetkA thatkidu      maRivili viththA raththana ...... mavikAra akilkamazh kaththU riththani yaNaimisai kaikkA sukkaLa      varuLpavar natpE kotpuRu ...... morupOthan pakalira viRpO thi

Thiruppugazh #103 ennaal pirakkavum

Image
முருகா! குருமூர்த்தியே! அடியேனுக்கு ஒரு உரிமையும் இல்லை. எல்லாம் உமது உடைமை. எல்லாம் உமது செயல். என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்  என்னால் துதிக்கவும் ...... கண்களாலே என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும் என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் ...... இங்குநானார் கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல் கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே கல்லார் மனத்துட னில்லா மனத்தவ கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன் மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே. ######################### ennAl piRakkavum ennAl iRakkavum ennAl thudhikkavum ...... kaNgaLAlE ennAl azhaikkavum ennAl nadakkavum ennAl irukkavum ...... peNdir veedu ennAl sukikkavum ennAl musikkavum ennAl salikkavum ...... thondha nOyai ennAl erikkavum ennAl ninaikkavum ennAl thar

Bhagavad Gita Summary Classes

Image
Shrimad Bhagavad Gita - A Synopsis of 18 chapters 4G - Go through Gita, Grow through Gita - Pujya Gurudev Swami Chinmayananda ji -------------------------------------- 18 chapters in 18 weekends Begins Saturday, August 28, 2021 -------------------------------------- Weekend Classes in English Saturdays and Sundays 6.45 pm to 7.30 pm -------------------------------------- Classes by Smt. Priya Arunachalam, Spiritual Mentor, Chinmaya Mission Thamaraipakkam Sessions will be held through zoom https://us02web.zoom.us/j/88504373427?pwd=YXB4MWhseTc4dXJSbEl6d1VUT1djQT09 Zoom Meeting ID: 885 0437 3427 Passcode: 247365 -------------------------------------- Eligibility - Open mind and basic English :-) Entry free! Registration MUST! https://forms.gle/hZqmYVPbNh88nvNN8 Other online classes Thirukkural Posts Thirukkural class Thiruppugazh class Sloka class with meaning Vishnu-sahasra nAmam class Bhagavad Gita Class Upanishads class Bhagavad Gita Summary Classes Bhagavad Gita Chanting

Thiruppugazh #102 vanjaththudan-oru

Image
வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை  வஞ்சிக் கொடியிடை ...... மடவாரும் வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு மண்டிக் கதறிடு ...... வகைகூர அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல் அங்கிக் கிரையென ...... வுடன்மேவ அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும் அன்றைக் கடியிணை ...... தரவேணும் கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து கன்றச் சிறையிடு ...... மயில்வீரா கண்டொத் தனமொழி அண்டத் திருமயில் கண்டத் தழகிய ...... திருமார்பா செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி செந்திற் பதிநக ...... ருறைவோனே செம்பொற் குலவட குன்றைக் கடலிடை சிந்தப் பொரவல ...... பெருமாளே ########################## vanjath thudanoru nenjiR palaninai vanjik kodiidai ...... madavArum vandhip pudhalvarum andhik kiLainyaru maNdik kadhaRidu ...... vagaikUra anjak kalaipadu panjip puzhuudal angik kiraiyena ...... udanmEva aNdip bayamuRa vendRic chamanvarum andRaik kadiyiNai ...... tharavENum kanjap piRamanai anjath thuyarseydhu kandRach chiRaiyidum ...... ayilveerA kaNdOth thanamozhi aNdath thirumayil kaNda

Thiruppugazh #101 vindhadhin oori

Image
சிவகுமாரரே!  வள்ளி மணவாளரே!  செந்திலாண்டவரே!  என் பிறவிக் களையாறத் திருவடிமலரைத் தருவீர் . விந்ததி னூறி வந்தது காயம் வெந்தது கோடி ...... யினிமேலோ விண்டுவி டாம லுன்பத மேவு விஞ்சையர் போல ...... அடியேனும் வந்துவி நாச முன்கலி தீர வண்சிவ ஞான ...... வடிவாகி வன்பத மேறி யென்களை யாற வந்தருள் பாத ...... மலர்தாராய் எந்தனு ளேக செஞ்சுட ராகி யென்கணி லாடு ...... தழல்வேணி எந்தையர் தேடு மன்பர்ச காய ரெங்கள்சு வாமி ...... யருள்பாலா சுந்தர ஞான மென்குற மாது தன்றிரு மார்பி ...... லணைவோனே சுந்தர மான செந்திலில் மேவு கந்தசு ரேசர் ...... பெருமாளே #################################### vindhadhin URi vandhadhu kAyam vendhadhu kOdi ...... inimElO viNdu vidAmal un padha mEvu vinjayar pOla ...... adiyEnum vandhu vinAsa mun kali theera vaN siva nyAna ...... vadivAgi vanpadham ERi en kaLaiyARa vandharuL pAdha ...... malar thArAy endhan uLEga sen chudarAgi en kaNilAdu ...... thazhal vENi endhaiyar thEdum anbar sahAyar engaLsu wAmi ...... aruL bAlA sun

VEL Vriththam 10

Image
வலாரியல லாகுலமி லாதகல வேகரிய  மாலறியு நாலு மறைநூல் வலானலை விலானசி விலான்மலை விலானிவர் மநோலய உலாசம் உறவே உலாவரு கலோலம கராலய சலங்களும் உலோகநிலை நீர்நிலையிலா வொலாவொலி நிசாசரர் உலோகம தெலாமழல் உலாவிய நிலாவு கொலைவேல் சிலாவட கலாவிநொ தவாசிலி முகாவிலொச னாசின சிலாத ணிவிலா சிலாமலர் எலாமதிய மோதமதி சேலொழிய சேவக சராப முகிலாம் விலாசகலி யாணகலை சேரபசு மேலைமுலை மேவிய விலாச அகலன் விலாழியி னிலாழியகல் வானில்அனல் ஆரவிடு வேழம்இளை ஞன்கை வேலே.

VEL Vriththam 9

Image
தேடுதற் கரிதான நவமணி அழுத்தியிடு செங்கரனை யமுதம் வாய்கொள் செயமளித் தருளெனக் கெனஉவப் பொடுவந்து சேவடி பிடித்ததெனவும் நீடுமைக் கடல்சுட்ட திற்கடைந் தெழுகடலும் நீயெமைக் காக்க எனவும் நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் காவெனவும் நிகழ்கின்ற துங்கநெடுவேல் ஆடுமைக் கணபணக் கதிர்முடிப் புடையெயிற் றடலெரிக் கொடிய உக்ர அழல்விழிப் படுகொலைக் கடையகட் செவியினுக் கரசினைத் தனியெடுத்தே சாடுமைப் புயலெனப் பசுநிறச் சிகரியிற் றாய்திமித் துடனடிக்குஞ் சமரமயில் வாகனன் அமரர்தொழு நாயகன் சண்முகன் தன்கை வேலே.

VEL Vriththam 8

Image
மாமுதல் தடிந்துதண் மல்குகிரி யூடுபோய்  வலியதா னவர்மார்பிடம் வழிகண்டு கமலபவ னத்தனைச் சிறையிட்டு மகவான் தனைச்சி றைவிடுத் தோமவிரு டித்தலைவர் ஆசிபெற் றுயர்வானில் உம்பர்சொற் றுதிபெற்றுநா உடையகீ ரன்தனது பாடல்பெற் றுலகுதனில் ஒப்பில்புகழ் பெற்ற வைவேல் சோமகல சப்ரபா லங்கார தரஜடா சூடிகா லாந்தகாலர் துங்கரக்ஷ கத்ரோண கட்ககுலி சஞ்சூல துரககே சரமாம்பரச் சேமவட வாம்புயப் பரணசங் காபரண திகம்பர த்ரியம்பகமகா தேவ நந்தனகஜா நநசகோ தரகுகன் செம்பொற் றிருக்கை வேலே.

VEL Vriththam 7

Image
அண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிரி  அநந்தமா யினுமேவினால் அடையவுரு விப்புறம் போவதல் லதுதங்கல் அறியாது சூரனுடலைக் கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங் கடியகொலை புரியு மதுசெங் கநகா சலத்தைக் கடைந்துமுனை யிட்டுக் கடுக்கின்ற துங்க நெடுவேல் தண்டந் தநுத்திகிரி சங்குகட் கங்கொண்ட தானவாந் தகன்மாயவன் தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத் தமனியச் சுடிகையின் மேல் வண்டொன்று கமலத்து மங்கையுங் கடல்ஆடை மங்கையும் பதம்வருடவே மதுமலர்க் கண்துயில் முகுந்தன்மரு கன்குகன் வாகைத் திருக்கை வேலே.

VEL Vriththam 6

Image
  பந்தாட லிற்கழங் காடலிற் சுடர்ஊசல் பாடலினொ டாடலின்எலாம் பழந்தெவ்வர் கட்கம் துணித்திந்தி ரற்கரசு பாலித்த திறல் புகழ்ந்தே சந்தாரு நாண்மலர்க் குழல்அரம் பையர்களும் சசிமங்கை அனையர்தாமுந் தன்னைஅன் பொடுபாடி ஆடும்ப்ர தாபமும் தலைமையும் பெற்ற வைவேல் மந்தாகிநித்தரங் கச்சடில ருக்கரிய மந்த்ரஉப தேச நல்கும் வரதேசி கன்கிஞ்சு கச்சிகா லங்கார வாரணக் கொடி உயர்த்தோன் கொந்தார் மலர்க்கடம் புஞ்செச்சை மாலையுங் குவளையுஞ் செங்காந்தளுங் கூதாள மலருந் தொடுத்தணியு மார்பினன் கோலத் திருக்கைவேலே.

VEL Vriththam 5

Image
ஆலமாய் அவுணருக் கமரருக் கமுதமாய்  ஆதவனின் வெம்மைஒளிமீ தரியதவ முநிவருக் கிந்துவிற் றண்ணென் றமைந்தன்ப ருக்கு முற்றா மூலமாம் வினையறுத் தவர்கள்வெம் பகையினை முடித்திந்தி ரர்க்கு மெட்டா முடிவிலா நந்தநல் கும்பத மளித்தெந்த மூதண்ட மும்புகழும் வேல் ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்து மின்பணைக ளுமிழு முத்தும் இனிவாடை மான்மதம் அகிலோடு சந்தனம் இலவங்க நறவமாருந் தாலமா மரமுதற் பொருள்படைத் திடும்எயினர் தருவநிதை மகிழ்நன் ஐயன் தனிநடம் புரிசமர முருகன்அறு முகன்குகன் சரவணக் குமரன் வேலே.

VEL Vriththam - 4

Image
அண்டர்உல குஞ்சுழல எண்திசைக ளுஞ்சுழல  அங்கியும் உடன்சுழலவே அலைகடல்க ளுஞ்சுழல அவுணருயி ருஞ்சுழல அகிலதல முஞ்சுழலவே மண்டல நிறைந்தரவி சதகோடி மதியுதிர மாணப் பிறங்கியணியும் மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம வகைவகையி னிற்சுழலும் வேல் தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய சந்தமுட னும்பிறைகள்போல் தந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடு தன்புறம் வருஞ்சமனையான் கண்டுகுலை யும்பொழுதில் அஞ்சலென மென்சரண கஞ்சம்உத வுங்கருணைவேள் கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி கணவன் அடல் கொண்ட வேலே.

Manah Shodhanam

Image
The problem of mind control is as old as the hills. The mind never tires of playing tricks and there is no way to peace unless it is tamed. Indeed he is strong who conquers others, but he is mighty who conquers himself. Manah Sodhanam is an original Sanskrit composition of Swami Tejomayananda. This text and commentary helps us understand the working of our mind and gives practical solutions of how to tackle it. With a pure mind, life becomes cheerful and meaningful and finally peaceful and blissful. manah shodhanam script Manah Shodanam presentation Sw Shivanandaji Spiritual Instructions for Sadhakas 1 Sw Shivanandaji Spiritual Instructions for Sadhakas 2

VEL Vriththam - 3

Image
வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும்  வெகுளுறு பசாசகணமும் வெங்கழு குடன்கொடி பருந்துசெம் புவனத்தில் வெம்பசி ஒழிக்கவந்தே ஆதார கமடமுங் கணபண வியாளமும் அடக்கிய தடக்கிரியெலாம் அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசை அருந்திப் புரந்தவைவேல் தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலை தனிப்பரங் குன்றேரகம் தணிகைசெந் தூரிடைக் கழிஆவி னன்குடி தடங்கடல் இலங்கைஅதனிற் போதார் பொழிற்கதிர் காமத் தலத்தினைப் புகழும்அவ ரவர்நாவினிற் புந்தியில் அமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன் புங்கவன் செங்கை வேலே.

Thiruppugazh iravu pagal

திருவருணை முருகா! நிலைத்த பொருளாகிய உனது திருவடியை அடையத்திருவருள் புரிவாய். இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ...... தமிழ்கூறித்   திரமதனைத் தெளிவாகத்  திருவருளைத் ...... தருவாயே பரகருணைப் பெருவாழ்வே  பரசிவதத் ...... துவஞானா அரனருள்சற் புதல்வோனே  அருணகிரிப் ...... பெருமாளே. ################ iravu pagal pala kAlum  iyalisai muth ...... thamizh kURi thiramadhanai theLivAga  thiru aruLai ...... tharuvAyE parakaruNai peruvAzhvE  parasiva thath ...... thuvanyAna aran aruL saR pudhalvOnE  aruNagirip ...... perumALE.

Vel Vriththam - 2

Image
Vel vriththam song 2 audio வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன்  வெற்றிபெறு சுடர் ஆழியும் விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி வெல்லா எனக்கருதியே சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ் சதுர்முகனும் நின்றிரப்பச் சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே தனிஆண்மை கொண்ட நெடுவேல் கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி கெளமாரி கமலாசனக் கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவிஅமலை கெளரிகா மாஷிசைவ சிங்காரி யாமளை பவாநிகார்த் திகைகொற்றி த்ரியம்பகி அளித்த செல்வச் சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன் செம்பொற் றிருக்கை வேலே.

Thiruppugazh samarppanam - song selection

Image
Hari Om. Velum mayilum thunai. This page has the details of who will sing & record which Thiruppugazh song that we learnt. This recording will be telecasted on July 23rd, Friday between 6.00 pm and 7.00 pm. Puja, Abhishekam, Alankaram and Thiruppugazh archanai will be done to Chinmaya Arupadai Velan on that day. During alankaram time, these recordings will be telecast for all the devotees to revel in Thiruppugazh and Lord Muruga. This is our small humble offering to the Supreme Kumaragurubaran. Vetrivel muruganuku.... arohara! Arumugam arumugam - Sundari, Nungambakkam Irumalu roga - Suguna Venkatraman Viral maran - Malliga charana kamalalayatha - Vasanthi Muthai tharu - Meenakshi Nataraj Naadha vindhu - Rama Venkat sinaththavar mudikkum - Pandi R Athla sedanarada - Vanithamani Paadhi madhi nadhi - Rajeswari Natarajan Kaalanaar venkodun - Kalaivani Shankar Santhatham bandha- Neha Shivani Kaithala nirai kani -Vijayalakshmi jeya jeya arunathiri - Uma Boopathy andar pathi kudiyera - R

Vel Vriththam - 1

Image
Vel vriththam song 1 audio மகரம்அள றிடைபுரள உரககண பணமவுலி  மதியும்இர வியுமலையவே வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல மகிழ்வுபெறு மறுசிறையவாஞ் சிகரவரை மனைமறுகு தொறுநுளைய மகளிர்செழு செநெல்களொடு தரளம் இடவே செகசிரப கிரதிமுதல் நதிகள்கதி பெற உததி திடர்அடைய நுகரும் வடிவேல் தகரமிரு கமதமென மணமருவு கடகலுழி தருகவுளும் உறுவள் எயிறுந் தழைசெவியும் நுதல்விழியும் உடையஒரு கடவுள்மகிழ் தருதுணைவன் அமரர்குயிலுங் குகரமலை எயினர்குல மடமயிலும் எனஇருவர் குயமொடமர் புரியுமுருகன் குமரன்அறு முகன்எதிரும் விருதுநிசி சரர்அணிகள் குலையவிடு கொடியவேலே.

Skandha Guru Maha Abhishekam 2021

Image
Hari Om 🙏🏼 Velum Mayilum thunai 🔱🦚 Chinmaya Sarveshwara brings you a blessed opportunity to participate online in   Skandha Guru Maha Abhishekam to Chinmaya Arupadai Velan. Lord Karthikeya is Skanda Guru, Swaminathan, Gurubaran, Thagappan Swami who wields his shakti jnana vel to destroy our ignorance. Worshiping Muruga bestows upon one all material and spiritual vitality and splendour. 📌 Date July 23, Friday. 🕕 Time 6.00 to 7.00 pm Please register for abhishekam using the below link. https://www.chinmayasarveshwara.com/p/registration-form.html Please send an email with transaction reference to chinmyasarveshwara@gmail.com Have darshan via Live telecast at http://www.youtube.com/ChinmayaSarveshwara/live Vettrivel Muruganukku... Arohara 🙏🏻

Thiruppugah paayiram songs

The Thiruppugazh paayiram songs are sung by those who do regular pArAyanam of Thiruppugazh. The author is unknown. These songs speak about the glory of the text, benefits of listening to Thiruppugazh, benefits of singing Thiruppugazh, Devotees' strength by singing.  நூற் சிறப்பு 1. எல்லாரும் ஞானத் தெளிஞரே? கேளீர், சொல் கல் எல்லாம் மாணிக்கக் கல்லாமோ? – பொல்லாக் கருப்புகழைக் கேட்குமோ? கானமயில் வீரன் திருப்புகழைக் கேட்குஞ் செவி. 2. மாணிக்கம் பூண்பார்க்கு மற்றொருகல் வேண்டுமோ? ஆணிப்பொன் கையுறுவார்க்கு ஐயுறவு ஏன்? – பேணிப்பின் செவ்வேல் விநோதன் திருப்புகழ் சிந்தித்து இருப்பார்க்கு எவ்வேலை வேண்டும் இனி?

Thiruppugazh #100 agara mudhalena

Image
மெளன உபதேசமந்திரத்தை உன் பழைய அடிமையாகிய அடியேனுக்கும் புரியும்படி இனிமையாக உபதேசித்து அருள்வாயாக. அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும் அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும் அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு ...... மாய அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு ...... காலம்

Thiruppugazh #99 nilayaadha samudhiram

Image
வள்ளி மணவாளரே! திருப்புகழைப் பாடுவித்து அடியவரை ஆட்கொள்பவரே! தணிகைமலை மேவு பவரோக வைத்திய நாதரே! நிலையாத சமுசாரமாகிய கடலினின்றும் அடியேனைக் கரையேற்றி ஆட்கொள்வீர். நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி நிசமான தெனப்பல பேசி ...... யதனூடே நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி நினைவால்நி னடித்தொழில் பேணி ...... துதியாமல்