Thiruppugazh mundhu thamizh maalai
யாகரக்ஷகரே! தமிழ் மாலையை யணிபவரே! தேவசகாயரே! சேவற் கொடி யுடையவரே! வணக்கம் புரிவாரது நேயரே! குன்றெறிந்த குமாரமூர்த்தியே! வள்ளி தேவசேனா சமேதரே! அடியார்க்கு அன்பரே! அசுரகுலகாலரே! செந்திலதிபரே! தமிழ்ப்பாக்களைப் பாடி அழிகின்ற மனிதர்கள் வாசல் தோறும் அலையாமலும், பண்டை வினை நீங்கவும், பெண்ணாசை அறவும், செம்பொன் மயில்மீது வந்தருள்வீர். முந்துதமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி ...... யுழலாதே முந்தைவினை யேவ ராமற் போக மங்கையர்கள் காதல் தூரத் தேக முந்தடிமை யேனை யாளத் தானு ...... முனைமீதே