Thiruppugazh #146 karipurari kamari
கரிபுராரி காமாரி ( விராலிமலை ) விராலிமலையுறை வேலவரே! சிவலோகம் அடைய அருள்வீர் . கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி கயிலை யாளி காபாலி ...... கழையோனி கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி கணமொ டாடி காயோகி ...... சிவயோகி பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி பகரொ ணாத மாஞானி ...... பசுவேறி பரத மாடி கானாடி பரவ யோதி காதீத பரம ஞான வூர்பூத ...... அருளாயோ சுருதி யாடி தாதாவி வெருவி யோட மூதேவி துரக கோப மீதோடி ...... வடமேரு சுழல வேலை தீமூள அழுத ளாவி வாய்பாறி சுரதி னோடு சூர்மாள ...... வுலகேழும் திகிரி மாதி ராவார திகிரி சாய வேதாள திரளி னோடு பாறோடு ...... கழுகாடச் செருவி னாடு வானீப கருணை மேரு வேபார திருவி ராலி யூர்மேவு ...... பெருமாளே.