Posts

Showing posts from January, 2022

Barathiyar - yoga siddhi

Image
யோக சித்தி வரங் கேட்டல் விண்ணும் மண்ணும் தனியாளும் - எங்கள்  வீரை சக்தி நினதருளே - என்றன்  கண்ணும் கருத்தும் எனக்கொண்டு - அன்பு  கசிந்து கசிந்து கசிந்துருகி - நான்  பண்ணும் பூசனை கள்எல்லாம் - வெறும்  பாலை வனத்தில் இட்ட நீரோ, - உனக்(கு)  எண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ? - அறி  வில்லா தகிலம் அளிப்பாயோ? நீயே சரணமென்று கூவி - என்றன்        நெஞ்சிற் பேருறுதி கொண்டு - அடி  தாயே! எனக்கு மிக நிதியும் -அறந்        தன்னைக் காக்கு மொருதிறனும் - தரு  வாயே என்றுபணிந் தேத்திப் - பல        வாறா நினது புகழ்பாடி - வாய்  ஓயே னாவதுண ராயோ? - நின(து) உண்மை தவறுவதோ அழகோ?  காளீ வலியசா முண்டி - ஓங்        காரத் தலைவியென் னிராணி - பல  நாளிங் கெனையலைக்க லாமோ, - உள்ளம்        நாடும் பொருளடைதற் கன்றோ? - மலர்த்  தாளில் விழுந்தபயங் கேட்டேன் - அது        தாரா யெனிலுயிரைத் தீராய் - துன்பம்  நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கரு        நீலியென் னியல்பறி யாயோ?  தேடிச் சோறுநிதந் தின்று - பல        சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்  வாடித் துன்பமிக உழன்று - பிறர்        வாடப் பலசெயல்கள் செய்து - நரை  கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்   

Thiruppugazh #139 maalayil vandhu

Image
மாலையில் வந்து (இலஞ்சி) முருகா! நீ இன்று வந்து அருள வேண்டும் . மாலையில் வந்து மாலை வழங்கு மாலை யநங்கன் ...... மலராலும் வாடை யெழுந்து வாடை செறிந்து வாடை யெறிந்த ...... அனலாலுங் கோல மழிந்து சால மெலிந்து கோமள வஞ்சி ...... தளராமுன் கூடிய கொங்கை நீடிய அன்பு கூரவு மின்று ...... வரவேணும் கால னடுங்க வேலது கொண்டு கானில் நடந்த ...... முருகோனே கான மடந்தை நாண மொழிந்து காத லிரங்கு ...... குமரேசா சோலை வளைந்து சாலி விளைந்து சூழு மிலஞ்சி ...... மகிழ்வோனே சூரிய னஞ்ச வாரியில் வந்த சூரனை வென்ற ...... பெருமாளே. -----------------------------

Thirupugazh #138 kaitharuna jothi

Image
கைத்தருண சோதி (சிதம்பரம்) சிதம்பர முருகா! எல்லாமும் நீயே. கைத்தருண சோதி யத்திமுக வேத      கற்பகச கோத்ரப் ...... பெருமாள்காண் கற்புசிவ காமி நித்யகலி யாணி      கத்தர்குரு நாதப் ...... பெருமாள்காண் வித்துருப ராம ருக்குமரு கான      வெற்றி யயில் பாணிப் ...... பெருமாள்காண் வெற்புளக டாக முட்குதிர வீசு      வெற்றிமயில் வாகப் ...... பெருமாள்காண் சித்ரமுக மாறு முத்துமணி மார்பு      திக்கினினி லாதப் ...... பெருமாள்காண் தித்திமிதி தீதெ னொத்திவிளை யாடு      சித்திரகு மாரப் ...... பெருமாள்காண் சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை      தொட்டகவி ராஜப் ...... பெருமாள்காண் துப்புவளி யோடு மப்புலியுர் மேவு      சுத்தசிவ ஞானப் ...... பெருமாளே ---------------------------------------------- பதம் பிரித்தல் ---------------------------------------------- கை தருண சோதி அத்தி முக வேத      கற்பக சகோத்ரப் ...... பெருமாள்காண்! கற்பு சிவகாமி நித்ய கலியாணி      கத்தர் குருநாதப் ...... பெருமாள்காண்! வித்து ருப ராமருக்கு மருகு ஆன      வெற்றி அயில் பாணிப் ...... பெருமாள்காண்! வெற்புஉள கடாகம் உட்க, உதிர வீசு      வெற்றிமயில் வாகப்

Thiruppugazh #137 paravu nedum kadhir

Image
முருகா! அன்பர்கள் அகம் மகிழ, வரங்களைத் தந்து அருள் புரிவாயாக. பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய பவனி வரும்படி ...... யதனாலே பகர வளங்களு நிகர விளங்கிய இருளை விடிந்தது ...... நிலவாலே வரையினி லெங்கணு முலவி நிறைந்தது வரிசை தரும்பத ...... மதுபாடி வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு மகிழ வரங்களு ...... மருள்வாயே அரஹர சுந்தர அறுமுக என்றுனி அடியர் பணிந்திட ...... மகிழ்வோனே அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத குறமக ளிங்கித ...... மணவாளா கருதரு திண்புய சரவண குங்கும களபம ணிந்திடு ...... மணிமார்பா கனக மிகும்பதி மதுரை வளம்பதி யதனில் வளர்ந்தருள் ...... பெருமாளே.

Thiruppugazh #136 gugane gurubarane

Image
சிதம்பர முருகா! அடியேனுடைய வினைகளும் நோயும் அற்று ஒழிய மயில் மீது வந்து அருள். குகனெ குருபர னேயென நெஞ்சிற் புகழ அருள்கொடு நாவினி லின்பக் குமுளி சிவவமு தூறுக வுந்திப் ...... பசியாறிக் கொடிய இருவினை மூலமும் வஞ்சக் கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக் குலைய நமசிவ யோமென கொஞ்சிக் ...... களிகூரப் பகலு மிரவுமி லாவெளி யின்புக் குறுகி யிணையிலி நாடக செம்பொற் பரம கதியிது வாமென சிந்தித் ...... தழகாகப் பவள மனதிரு மேனியு டன்பொற் சரண அடியவ ரார்மன வம்பொற் றருண சரண்மயி லேறியு னம்பொற் ...... கழல்தாராய் தகுட தகுதகு தாதக தந்தத் திகுட திகுதிகு தீதக தொந்தத் தடுடு டுடுடுடு டாடக டிங்குட் ...... டியல்தாளம் தபலை திமிலைகள் பூரிகை பம்பைக் கரடி தமருகம் வீணைகள் பொங்கத் தடிய ழனவுக மாருத சண்டச் ...... சமரேறிக் ககன மறைபட ஆடிய செம்புட் பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக் கடல்க ளெறிபட நாகமு மஞ்சத் ...... தொடும்வேலா கயிலை மலைதனி லாடிய தந்தைக் குருக மனமுன நாடியெ கொஞ்சிக் கனக சபைதனில் மேவிய கந்தப் ...... பெருமாளே.

Thiruppugazh #135 sikaram arundha

Image
முருகா! உன்னை நினைந்து உய்ய அருள் சிகர மருந்த வாழ்வது ...... சிவஞானம் சிதறி யலைந்து போவது ...... செயலாசை மகர நெருங்க வீழ்வது ...... மகமாய மருவி நினைந்தி டாவருள் ...... புரிவாயே அகர நெருங்கி னாமய ...... முறவாகி அவச மொடுங்கை யாறொடு ...... முனமேகிக் ககன மிசைந்த சூரியர் ...... புகமாயை கருணை பொழிந்து மேவிய ...... பெருமாளே. ------------------------------ sikaram arundha vAzhvadhu ...... sivanyAnam sidhaRi alaindhu pOvadhu ...... seyalAsai makara nerunga veezhvadhu ...... magamAya maruvi ninain dhidA aruL ...... purivAyE akara nerungin Amayam ...... uRavAgi avasa modung kaiyARodu ...... munamEgi gaganam isaindha sUriyar ...... pugamAyai karuNai pozhindhu mEviya ...... perumALE.