Posts

Showing posts from 2022

Thiruppugazh #156 ayil othu

Image
முருகா! பெண் ஆசையால் அழியாமல், உன் ஆசையால் அழியாத பதத்தைப் பெற அருள். அயிலொத் தெழுமிரு ...... விழியாலே அமுதொத் திடுமரு ...... மொழியாலே சயிலத் தெழுதுணை ...... முலையாலே தடையுற் றடியனு ...... மடிவேனோ கயிலைப் பதியரன் ...... முருகோனே கடலக் கரைதிரை ...... யருகேசூழ் மயிலைப் பதிதனி ...... லுறைவோனே மகிமைக் கடியவர் ...... பெருமாளே.

Thiruppugazh #155 manai makkal

Image
வள்ளிமணவாளரே! தேவர் சிறை மீட்ட தேவ தேவரே! மனைமக்கள் மீதுள்ள பற்றையறுத்து, அவகதி செல்லாமல் சிவகதி பெற அருள்புரிவீர் . மனைமக்கள் சுற்ற ...... மெனுமாயா வலையைக்க டக்க ...... அறியாதே வினையிற்செ ருக்கி ...... யடிநாயேன் விழலுக்கி றைத்து ...... விடலாமோ சுனையைக்க லக்கி ...... விளையாடு சொருபக்கு றத்தி ...... மணவாளா தினநற்ச ரித்ர ...... முளதேவர் சிறைவெட்டிவிட்ட ...... பெருமாளே

Thiruppugazh #154 anju-vidha-bhudham

Image
முருகா! அருந்தமிழால் உம்மைப் பாடி வழிபட்டு, வீடுபேற்றை அடைய அருள். அஞ்சுவித பூத முங்கரண நாலு மந்திபகல் யாது ...... மறியாத அந்தநடு வாதி யொன்றுமில தான அந்தவொரு வீடு ...... பெறுமாறு மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர் மங்கைதனை நாடி ...... வனமீது வந்தசர ணார விந்தமது பாட வண்டமிழ்வி நோத ...... மருள்வாயே குஞ்சரக லாப வஞ்சியபி ராம குங்குமப டீர ...... வதிரேகக் கும்பதன மீது சென்றணையு மார்ப குன்றுதடு மாற ...... இகல்கோப வெஞ்சமர சூர னெஞ்சுபக வீர வென்றிவடி வேலை ...... விடுவோனே விம்பமதில் சூழு நிம்பபுர வாண விண்டலம கீபர் ...... பெருமாளே.

Thiruppugazh #153 muthu therikka

Image
முத்துத் தெறிக்க (திருத்தணிகை) திருத்தணிகை வேலா! உன்னை நினைந்து வருந்தும் இந்தத் தலைவி முன் இன்றே திருத்தணிகையில் வந்து அருள் . முத்துத்தெ றிக்கவள ரிக்குச்சி லைக்கைமதன்      முட்டத்தொ டுத்த ...... மலராலே முத்தத்தி ருச்சலதி முற்றத்து தித்தியென      முற்பட்டெ றிக்கு ......நிலவாலே எத்தத்தை யர்க்குமித மிக்குப்பெ ருக்கமணி      இப்பொற்கொ டிச்சி ...... தளராதே எத்திக்கு முற்றபுகழ் வெற்றித்தி ருத்தணியில்      இற்றைத்தி னத்தில் ...... வரவேணும் மெத்தச்சி னத்துவட திக்குக்கு லச்சிகர      வெற்பைத்தொ ளைத்த ...... கதிர்வேலா மெச்சிக்கு றத்திதன மிச்சித் தணைத்துருகி      மிக்குப்ப ணைத்த ...... மணிமார்பா மத்தப்ர மத்தரணி மத்தச்ச டைப்பரமர்      சித்தத்தில் வைத்த ...... கழலோனே வட்டத்தி ரைக்கடலில் மட்டித்தெ திர்த்தவரை      வெட்டித்து ணித்த ...... பெருமாளே. பதம் பிரித்தல் முத்துத் தெறிக்க வளர் இக்குச் சிலைக்கை மதன்      முட்டத் தொடுத்த ...... மலராலே, முத்தத் திருச்சலதி முற்றத்து உதித் தி என      முற்பட்டு எறிக்கும் ......நிலவாலே, எத் தத்தையர்க்கும் இதமிக்குப் பெருக்கம் அணி      இப்பொன் கொடிச்சி ...... தளராதே,

Thiruppugazh #152 Thimira udhadhi

Image
திமிர உததி (பழநி) திருப்பழநி ஆண்டவரே! அடியேனுக்கு மறுபிறப்பு இருந்தால், செவிடு, குருடு, அங்க ஈனம், வறுமை வேண்டாம்; சீரிய தேவசரீரம், சீரியகுலம், மெய்யறிவு, நிறைவு இவற்றைத் தந்தருள்வீர். திமிர வுததி யனைய நரக      செனன மதனில் ...... விடுவாயேல் செவிடு குருடு வடிவு குறைவு      சிறிது மிடியு ...... மணுகாதே அமரர் வடிவு மதிக குலமு      மறிவு நிறையும் ...... வரவேநின் அருள தருளி யெனையு மனதொ      டடிமை கொளவும் ...... வரவேணும் சமர முகவெ லசுரர் தமது      தலைக ளுருள ...... மிகவேநீள் சலதி யலற நெடிய பதலை      தகர அயிலை ...... விடுவோனே வெமர வணையி லினிது துயிலும்      விழிகள் நளினன் ...... மருகோனே மிடறு கரியர் குமர பழநி      விரவு மமரர் ...... பெருமாளே பதம் பிரித்தல் திமிர உததி அனைய நரக      செனனம் அதனில் ...... விடுவாயேல், செவிடு, குருடு, வடிவு குறைவு,      சிறிது மிடியும் ......     அணுகாதே, அமரர் வடிவும், அதிக குலமும்,      அறிவும் நிறையும் ......     வரவேநின், அருளது அருளி எனையும் மனதொடு      அடிமை கொளவும் ...... வரவேணும். சமர முகவெல் அசுரர் தமது      தலைகள் உருள ......   மிகவே, நீள் சலதி அலற, நெட

Thiruppugazh #151 nilaiyApporuLai

Image
சூரனைத் தடிந்த வீரமூர்த்தியே!  சிவமூர்த்திக்கு உபதேசித்த தவமூர்த்தியே!  செந்திலம்பதியுறைச் செவ்வேளே!  உமது திருவடியைத் தந்தருள்வீர். நிலையாப் பொருளை யுடலாக் கருதி  நெடுநாட் பொழுது ...... மவமேபோய் நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள் நிறைவாய்ப் பொறிகள் ...... தடுமாறி மலநீர்ச் சயன மிசையாப் பெருகி மடிவேற் குரிய ...... நெறியாக மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு மலர்தாட் கமல ...... மருள்வாயே கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி குளமாய்ச் சுவற ...... முதுசூதம் குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு கொதிவேற் படையை ...... விடுவோனே அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர அழியாப் புநித ...... வடிவாகும் அரனார்க் கதித பொருள்காட் டதிப அடியார்க் கெளிய ...... பெருமாளே.

Thiruppugazh #149 ninamodu kurudhi

Image
முருகா! சிறியேனுக்குத் தகுதி இல்லையாயினும், குருமூர்த்தமாக நீரே வந்து   உபநிடதங்களின் உண்மைகளை உபதேசித்து உய்விப்பீராக. நிணமொடு குருதி நரம்பு மாறிய  தசைகுடல் மிடையு மெலும்பு தோலிவை நிரைநிரை செறியு முடம்பு நோய்படு ...... முதுகாயம் நிலைநிலை யுருவ மலங்க ளாவது நவதொளை யுடைய குரம்பை யாமிதில் நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவ ...... முயவோரும் உணர்விலி செபமுத லொன்று தானிலி நிறையிலி முறையிலி யன்பு தானிலி உயர்விலி யெனினுமெ னெஞ்சு தானினை ...... வழியாமுன் ஒருதிரு மரகத துங்க மாமிசை யறுமுக மொளிவிட வந்து நான்மறை யுபநிட மதனை விளங்க நீயருள் ...... புரிவாயே புணரியில் விரவி யெழுந்த ஞாயிறு விலகிய புரிசை யிலங்கை வாழ்பதி பொலமணி மகுட சிரங்கள் தாமொரு ...... பதுமாறிப் புவியிடை யுருள முனிந்து கூர்கணை யுறுசிலை வளைய வலிந்து நாடிய புயலதி விறலரி விண்டு மால்திரு ...... மருகோனே அணிதரு கயிலை நடுங்க வோரெழு குலகிரி யடைய இடிந்து தூளெழ அலையெறி யுததி குழம்ப வேல்விடு ...... முருகோனே அமலைமு னரிய தவஞ்செய் பாடல வளநகர் மருவி யம

Thiruppugazh #148 Edhu buddhi aiya

Image
திருத்தணிகை வேலா! நீயே எனது தந்தை. மகனாகிய என்னை ஆதரித்து அருள் புரிவாய் . ஏது புத்தி ஐயா எனக்கு? இனி      யாரை நத்திடுவேன்? அவத்தினிலே       இறத்தல் கொலோ? எனக்கு நீ ...... தந்தை தாய் என்றே இருக்கவும், நானும் இப்படியே      தவித்திடவோ? சகத்தவர்           ஏசலில் படவோ? நகைத்தவர் ...... கண்கள்காணப் பாதம் வைத்து, இடை ஆதரித்து, எனை      தாளில் வைக்க நீயே மறுத்திடில்,           பார் நகைக்கும் ஐயா, தகப்பன் முன் ......மைந்தன்ஓடிப் பால் மொழிக் குரல் ஓலம் இட்டிடில்      யார் எடுப்பது எனா வெறுத்து அழ,           பார் விடுப்பர்களோ? எனக்கு இது ...... சிந்தியாதோ? ஓதம் உற்று எழு பால் கொதித்தது      போல, எட்டிகை நீச முட்டரை           ஓட வெட்டிய பாநு சத்தி கை ...... எங்கள்கோவே! ஓத மொய்ச்சடை ஆட உற்று, அமர்      மான் மழுக்கரம் ஆட, பொற்கழல்           ஓசை பெற்றிடவே நடித்தவர் ...... தந்தவாழ்வே! மா தினைப்புன மீது இருக்கும், மை      வாள்விழிக் குறமாதினை, திரு           மார்பு அணைத்த மயூர! அற்புத! ...... கந்தவேளே! மாரன் வெற்றிகொள் பூ முடிக் குழ-      லார் வியப்பு உற, நீடு மெய்த்தவர்           வாழ் திருத்தணி மாமல

Thiruppugazh #147 thalaiyai mazhiththu

Image
தலையை மழித்து ( திருவருணை ) திருவருணை முருகா! வெளிவேடத்தால் அடியேன் படும் துயர் தீர்த்து அருள் . தலையை மழித்துச் சிவந்த துணியை யரைக்குப் புனைந்து சடையை வளர்த்துப் புரிந்து ...... புலியாடை சதிரொடு வப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து தவமொரு சத்தத் தறிந்து ...... திருநீறு கலையை மிகுத்திட் டணிந்து கரண வலைக்குட் புகுந்து கதறு நிலைக்கைக் கமர்ந்த ...... எழிலோடே கனக மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற் றறிந்து கவலை யொழித்தற் கிரங்கி ...... யருள்வாயே அலைகட லிற்கொக் கரிந்து மருவரை யைப்பொட் டெறிந்து மமரு லகத்திற் புகுந்து ...... முயரானை அருளொடு கைப்பற்றி வந்து மருண கிரிப்புக் கிருந்து மறிவு ளபத்தர்க் கிரங்கு ...... மிளையோனே மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து வறிது நகைத்திட் டிருந்த ...... சிவனார்தம் மதலை புனத்திற் புகுந்து நரவடி வுற்றுத் திரிந்து மறம யிலைச்சுற் றிவந்த ...... பெருமாளே.

Thiruppugazh #146 karipurari kamari

Image
கரிபுராரி காமாரி ( விராலிமலை ) விராலிமலையுறை வேலவரே! சிவலோகம் அடைய அருள்வீர் . கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி      கயிலை யாளி காபாலி ...... கழையோனி கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி      கணமொ டாடி காயோகி ...... சிவயோகி பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி      பகரொ ணாத மாஞானி ...... பசுவேறி பரத மாடி கானாடி பரவ யோதி காதீத      பரம ஞான வூர்பூத ...... அருளாயோ சுருதி யாடி தாதாவி வெருவி யோட மூதேவி      துரக கோப மீதோடி ...... வடமேரு சுழல வேலை தீமூள அழுத ளாவி வாய்பாறி      சுரதி னோடு சூர்மாள ...... வுலகேழும் திகிரி மாதி ராவார திகிரி சாய வேதாள      திரளி னோடு பாறோடு ...... கழுகாடச் செருவி னாடு வானீப கருணை மேரு வேபார      திருவி ராலி யூர்மேவு ...... பெருமாளே.

Thiruppugazh #145 marukku laviya

Image
மருக்கு லாவிய (திருவிடைக்கழி) முருகா! சர்வ வல்லமை பொருந்தியவரே! ஒளி மிக்க பச்சை நிற மயிலின் மீது வரும் வீரரே! திருக்கையில் வேலை ஏந்திய, திருமேனி அழகரே! அடியேனை ஆட்கொண்டு அருள் புரியவேணும். மருக்கு லாவிய மலரணை ...... கொதியாதே வளர்த்த தாய்தமர் வசையது ...... மொழியாதே கருக்கு லாவிய அயலவர் ...... பழியாதே கடப்ப மாலையை யினிவர ...... விடவேணும் தருக்கு லாவிய கொடியிடை ...... மணவாளா சமர்த்த னேமணி மரகத ...... மயில்வீரா திருக்கு ராவடி நிழல்தனி ...... லுறைவோனே திருக்கை வேல்வடி வழகிய ...... பெருமாளே.

Thirpuugazh pArAyanam #9

Image
Songs for pArAyanam on March 17, 6.45 AM Session will be through zoom. Zoom Meeting ID : 885 0437 3427 Passcode: 247365 Lead & follow format Session will be streamed to YouTube Channel  " Chinmaya Sarveshwara " எழுகடல் மணலை குமர குருபர குணதர கழைமுத்து மாலை உருவேற வேஜெ பித்து நிலையாத சமுத்திர

Thiruppugazh #144 vachana miga

Image
பழநியப்பா! ஆறெழுத்தை அன்புடன் ஓதி, இம்மை அம்மை நலன்களை எய்த அருள்.   வசனமிக வேற்றி ...... மறவாதே  மனதுதுய ராற்றி ...... லுழலாதே இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே இகபரசெள பாக்ய ...... மருள்வாயே பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே. கருத்துரை மெய்ஞ்ஞான சொரூபியே!  பழநியாண்டவரே!  அசுரகுலகால!  அமரர் சிறை மீட்ட பெருமாளே!  அடியேனுடைய மனது துன்பக்கடலில் விழாவண்ணம்,  தேவரீரை மறவாமல் சடக்கர மந்திரத்தை விதிப்படி ஜெபிக்கச் செய்து,  இகபர வாழ்வை வழங்கி அருள்வீர்.

Thiruppugazh #143 thaarakaasuran sarindhu

Image
தாரகாசுரன் சரிந்து (தேவனூர்) முருகா! தேவரீரை அடியேன் ஆவல் தீர நின்று புகழ்தல் வேண்டும். தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து      சாதி பூத ரங்கு லுங்க ...... முதுமீனச் சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று      தாரை வேல்தொ டுங்க டம்ப ...... மததாரை ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து      மானை யாளு நின்ற குன்ற ...... மறமானும் ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்      ஆவல் தீர என்று நின்று ...... புகழ்வேனோ பார மார்த ழும்பர் செம்பொன் மேனி யாளர் கங்கை வெண்க      பால மாலை கொன்றை தும்பை ...... சிறுதாளி பார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு      பானல் கூவி ளங்க ரந்தை ...... அறுகோடே சேர வேம ணந்த நம்ப ரீச னாரி டஞ்சி றந்த      சீத ளார விந்த வஞ்சி ...... பெருவாழ்வே தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு      தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே

MSR22 Relay Yajna Topics

Image
Every year on the day of Maha Shivarathri, CHYKs from Thamaraipakkam center do a relay yajna. This year the below topics will be elaborated by the young minds. March 1, Tuesday. பஞ்சபூத ஸ்தலம் - சிதம்பரம் - Balaji பஞ்சபூத ஸ்தலம் - காளஹஸ்தி பஞ்சபூத ஸ்தலம் - திருவண்ணாமலை - Gunalan பஞ்சபூத ஸ்தலம் - திருவாணைக்காவல் - K.Nagaraj பஞ்சபூத ஸ்தலம் - காஞ்சீபுரம் - Nagaraj சிவமும் கருணையும் -  R. Bhavani  (3rd batch) சிவமும் வீரமும் -  B. Bhavadharani சிவமும் பற்றின்மையும் சிவமும் ஞானமும் சிவம் என்னும் குரு ஞான தீபம் - "இல்லக விளக்கது இருள் கெடுப்பது" விளக்கம் - M. Keerthana லிங்க வழிபாடு - Ramkumar.P மனதின் நிறம் - Ponraj வாழ்க்கை என்னும் யாத்திரை - Hemanathan மொழி (மனதின் வெளிப்பாடு) - Dinesh Kumar.V ஸம்ப்ரதாயமும் உடல் நலமும் - A. Nithiyan

Thiruppugazh #142 saiva mudhal guruvaaye

Image
சைவமுதற் குருவாயே (மதுரை) சைவமுதற் குருவாயே சமணர்களைத் …… தெறுவோனே பொய்யர்உளத் தணுகானே புனிதவருட் …… புரிவாயே கையின்மிசைக் கதிர்வேலா கடிகமழற் …… புதநீபா தெய்வசற் குருநாதா திருமதுரைப் …… பெருமாளே.

Maha Shivarathri 2022

Image
🔱 MAHA SHIVARATHRI March 1, Tuesday Chinmaya Sarveshwara, Thamaraipakkam PANCHA BHUTA STHALA DARSHANAM (8.00 AM to 8.00 PM) 🌸 Kanchi Ekambareshwarar 🌸 Thiruvanaikkaval Jambukeshwarar 🌸 Thiruvannamalai Arunachaleshwarar 🌸 Kalahasthi Sri-kala-hasteeshwarar 🌸 Thillai Chidambareshwarar One will get the benefit of worshiping Lord Shiva in pancha-bhuta-sthalam. ----------------- 🌺 Do Abhishekam with your own hands to Sphatika-lingeshwarar 🌺 Take part in homam & kaala-puja For Registration: https://www.chinmayasarveshwara.com/p/registration-form.html Om Nama Shivaya 🔥  

Thiruppugazh #141 aasaikoor paththan

Image
ஆசைகூர் பத்த (பொதுப்பாடல்கள்) முருகா! மந்திர மாலையை, அழகிய பவளம் போல் சிவந்த திருவடிகளில் அணிவிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ? ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம      மானபூ வைத்து ...... நடுவேயன் பானநூ லிட்டு நாவிலே சித்ர      மாகவே கட்டி ...... யொருஞான வாசம்வீ சிப்ர காசியா நிற்ப      மாசிலோர் புத்தி ...... யளிபாட மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர      வாளபா தத்தி ...... லணிவேனோ மூசுகா னத்து மீதுவாழ் முத்த      மூரல்வே டிச்சி ...... தனபார மூழ்குநீ பப்ர தாபமார் பத்த      மூரிவே ழத்தின் ...... மயில்வாழ்வே வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு      வேகவே தித்து ...... வருமாசூர் வீழமோ திப்ப ராரைநா கத்து      வீரவேல் தொட்ட ...... பெருமாளே.

Thiruppugazh #140 nada pirappu

Image
நாடா பிறப்பு (சிதம்பரம்) சிதம்பர முருகா! என்னுடைய முறையீட்டைத் திருச்செவி சாத்தி, எனது மனக்கவலை தீரும்படியாக அடியேன் முன் எழுந்தருளி வர வேண்டும். நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி நாயே னரற்றுமொழி ...... வினையாயின் நாதா திருச்சபையி னேறாது சித்தமென நாலா வகைக்குமுன ...... தருள்பேசி வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி வாய்பாறி நிற்குமெனை ...... அருள்கூர வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது வாரே னெனக்கெதிர் முன் ...... வரவேணும் சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி தோலா சனத்தியுமை ...... யருள்பாலா தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த தோழா கடப்பமல ...... ரணிவோனே ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு மேராள் குறத்திதிரு ...... மணவாளா ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை ஈடேற வைத்தபுகழ் ...... பெருமாளே

Barathiyar - yoga siddhi

Image
யோக சித்தி வரங் கேட்டல் விண்ணும் மண்ணும் தனியாளும் - எங்கள்  வீரை சக்தி நினதருளே - என்றன்  கண்ணும் கருத்தும் எனக்கொண்டு - அன்பு  கசிந்து கசிந்து கசிந்துருகி - நான்  பண்ணும் பூசனை கள்எல்லாம் - வெறும்  பாலை வனத்தில் இட்ட நீரோ, - உனக்(கு)  எண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ? - அறி  வில்லா தகிலம் அளிப்பாயோ? நீயே சரணமென்று கூவி - என்றன்        நெஞ்சிற் பேருறுதி கொண்டு - அடி  தாயே! எனக்கு மிக நிதியும் -அறந்        தன்னைக் காக்கு மொருதிறனும் - தரு  வாயே என்றுபணிந் தேத்திப் - பல        வாறா நினது புகழ்பாடி - வாய்  ஓயே னாவதுண ராயோ? - நின(து) உண்மை தவறுவதோ அழகோ?  காளீ வலியசா முண்டி - ஓங்        காரத் தலைவியென் னிராணி - பல  நாளிங் கெனையலைக்க லாமோ, - உள்ளம்        நாடும் பொருளடைதற் கன்றோ? - மலர்த்  தாளில் விழுந்தபயங் கேட்டேன் - அது        தாரா யெனிலுயிரைத் தீராய் - துன்பம்  நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கரு        நீலியென் னியல்பறி யாயோ?  தேடிச் சோறுநிதந் தின்று - பல        சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்  வாடித் துன்பமிக உழன்று - பிறர்        வாடப் பலசெயல்கள் செய்து - நரை  கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்   

Thiruppugazh #139 maalayil vandhu

Image
மாலையில் வந்து (இலஞ்சி) முருகா! நீ இன்று வந்து அருள வேண்டும் . மாலையில் வந்து மாலை வழங்கு மாலை யநங்கன் ...... மலராலும் வாடை யெழுந்து வாடை செறிந்து வாடை யெறிந்த ...... அனலாலுங் கோல மழிந்து சால மெலிந்து கோமள வஞ்சி ...... தளராமுன் கூடிய கொங்கை நீடிய அன்பு கூரவு மின்று ...... வரவேணும் கால னடுங்க வேலது கொண்டு கானில் நடந்த ...... முருகோனே கான மடந்தை நாண மொழிந்து காத லிரங்கு ...... குமரேசா சோலை வளைந்து சாலி விளைந்து சூழு மிலஞ்சி ...... மகிழ்வோனே சூரிய னஞ்ச வாரியில் வந்த சூரனை வென்ற ...... பெருமாளே. -----------------------------

Thirupugazh #138 kaitharuna jothi

Image
கைத்தருண சோதி (சிதம்பரம்) சிதம்பர முருகா! எல்லாமும் நீயே. கைத்தருண சோதி யத்திமுக வேத      கற்பகச கோத்ரப் ...... பெருமாள்காண் கற்புசிவ காமி நித்யகலி யாணி      கத்தர்குரு நாதப் ...... பெருமாள்காண் வித்துருப ராம ருக்குமரு கான      வெற்றி யயில் பாணிப் ...... பெருமாள்காண் வெற்புளக டாக முட்குதிர வீசு      வெற்றிமயில் வாகப் ...... பெருமாள்காண் சித்ரமுக மாறு முத்துமணி மார்பு      திக்கினினி லாதப் ...... பெருமாள்காண் தித்திமிதி தீதெ னொத்திவிளை யாடு      சித்திரகு மாரப் ...... பெருமாள்காண் சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை      தொட்டகவி ராஜப் ...... பெருமாள்காண் துப்புவளி யோடு மப்புலியுர் மேவு      சுத்தசிவ ஞானப் ...... பெருமாளே ---------------------------------------------- பதம் பிரித்தல் ---------------------------------------------- கை தருண சோதி அத்தி முக வேத      கற்பக சகோத்ரப் ...... பெருமாள்காண்! கற்பு சிவகாமி நித்ய கலியாணி      கத்தர் குருநாதப் ...... பெருமாள்காண்! வித்து ருப ராமருக்கு மருகு ஆன      வெற்றி அயில் பாணிப் ...... பெருமாள்காண்! வெற்புஉள கடாகம் உட்க, உதிர வீசு      வெற்றிமயில் வாகப்

Thiruppugazh #137 paravu nedum kadhir

Image
முருகா! அன்பர்கள் அகம் மகிழ, வரங்களைத் தந்து அருள் புரிவாயாக. பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய பவனி வரும்படி ...... யதனாலே பகர வளங்களு நிகர விளங்கிய இருளை விடிந்தது ...... நிலவாலே வரையினி லெங்கணு முலவி நிறைந்தது வரிசை தரும்பத ...... மதுபாடி வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு மகிழ வரங்களு ...... மருள்வாயே அரஹர சுந்தர அறுமுக என்றுனி அடியர் பணிந்திட ...... மகிழ்வோனே அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத குறமக ளிங்கித ...... மணவாளா கருதரு திண்புய சரவண குங்கும களபம ணிந்திடு ...... மணிமார்பா கனக மிகும்பதி மதுரை வளம்பதி யதனில் வளர்ந்தருள் ...... பெருமாளே.

Thiruppugazh #136 gugane gurubarane

Image
சிதம்பர முருகா! அடியேனுடைய வினைகளும் நோயும் அற்று ஒழிய மயில் மீது வந்து அருள். குகனெ குருபர னேயென நெஞ்சிற் புகழ அருள்கொடு நாவினி லின்பக் குமுளி சிவவமு தூறுக வுந்திப் ...... பசியாறிக் கொடிய இருவினை மூலமும் வஞ்சக் கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக் குலைய நமசிவ யோமென கொஞ்சிக் ...... களிகூரப் பகலு மிரவுமி லாவெளி யின்புக் குறுகி யிணையிலி நாடக செம்பொற் பரம கதியிது வாமென சிந்தித் ...... தழகாகப் பவள மனதிரு மேனியு டன்பொற் சரண அடியவ ரார்மன வம்பொற் றருண சரண்மயி லேறியு னம்பொற் ...... கழல்தாராய் தகுட தகுதகு தாதக தந்தத் திகுட திகுதிகு தீதக தொந்தத் தடுடு டுடுடுடு டாடக டிங்குட் ...... டியல்தாளம் தபலை திமிலைகள் பூரிகை பம்பைக் கரடி தமருகம் வீணைகள் பொங்கத் தடிய ழனவுக மாருத சண்டச் ...... சமரேறிக் ககன மறைபட ஆடிய செம்புட் பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக் கடல்க ளெறிபட நாகமு மஞ்சத் ...... தொடும்வேலா கயிலை மலைதனி லாடிய தந்தைக் குருக மனமுன நாடியெ கொஞ்சிக் கனக சபைதனில் மேவிய கந்தப் ...... பெருமாளே.

Thiruppugazh #135 sikaram arundha

Image
முருகா! உன்னை நினைந்து உய்ய அருள் சிகர மருந்த வாழ்வது ...... சிவஞானம் சிதறி யலைந்து போவது ...... செயலாசை மகர நெருங்க வீழ்வது ...... மகமாய மருவி நினைந்தி டாவருள் ...... புரிவாயே அகர நெருங்கி னாமய ...... முறவாகி அவச மொடுங்கை யாறொடு ...... முனமேகிக் ககன மிசைந்த சூரியர் ...... புகமாயை கருணை பொழிந்து மேவிய ...... பெருமாளே. ------------------------------ sikaram arundha vAzhvadhu ...... sivanyAnam sidhaRi alaindhu pOvadhu ...... seyalAsai makara nerunga veezhvadhu ...... magamAya maruvi ninain dhidA aruL ...... purivAyE akara nerungin Amayam ...... uRavAgi avasa modung kaiyARodu ...... munamEgi gaganam isaindha sUriyar ...... pugamAyai karuNai pozhindhu mEviya ...... perumALE.