Posts

Showing posts from November, 2021

Thiruppugazh #127

Image
திருத்தணிகை வேலா! கீழ்மக்களைப் பாடி வாடாமல், உன்னையே பாடி உய்ய அருள் சொரியு முகிலைப் பதும நிதியைச்  சுரபி தருவைச் ...... சமமாகச் சொலியு மனமெட் டனையு நெகிழ்விற் சுமட ரருகுற் ...... றியல்வாணர் தெரியு மருமைப் பழைய மொழியைத் திருடி நெருடிக் ...... கவிபாடித் திரியு மருள்விட் டுனது குவளைச் சிகரி பகரப் ...... பெறுவேனோ கரிய புருவச் சிலையும் வளையக் கடையில் விடமெத் ...... தியநீலக் கடிய கணைபட் டுருவ வெருவிக் கலைகள் பலபட் ...... டனகானிற் குரிய குமரிக் கபய மெனநெக் குபய சரணத் ...... தினில்வீழா உழையின் மகளைத் தழுவ மயலுற் றுருகு முருகப் ...... பெருமாளே. ---------------------- soriyu mukilaip pathuma nithiyaic s urapi tharuvaic ......  s amamAkac s oliyu manamet tanaiyu nekizhviR sumada rarukut ...... RiyalvANar theriyu marumaip pazhaiya mozhiyaith thirudi nerudik ...... kavipAdith thiriyu maruLvit tunathu kuvaLaic s ikari pakarap ...... peRuvEnO kariya puruvac  s ilaiyum vaLaiyak kadaiyil vidameth ...... thiyaneelak kadiya kaNaipat turuva veruvik

Thiruppugazh #126 kolai madha

Image
மாதர் மயக்கத்தை விட்டு,  திருவருள் நெறியில் நின்று திருவடி பெற கொலைமத கரியன ம்ருகமத தனகிரி கும்பத் ...... தனமானார் குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல் கொண்டுற் ...... றிடுநாயேன் நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழி நின்றுற் ...... றிடவேதான் நினதிரு வடிமல ரிணைமன தினிலுற நின்பற் ...... றடைவேனோ சிலையென வடமலை யுடையவர் அருளிய செஞ்சொற் ...... சிறுபாலா திரைகட லிடைவரும் அசுரனை வதைசெய்த செந்திற் ...... பதிவேலா விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்வி ரும்பிப் ...... புணர்வோனே விருதணி மரகத மயில்வரு குமரவி டங்கப் ...... பெருமாளே ----------------------------------------- kolaimatha kariyana mrukamatha thanakiri kumpath ...... thanamAnAr kumuthA muthaithazh parukiyu rukimayal koNdut ...... RidunAyEn nilaiyazhi kavalaikaL kedavuna tharuLvizhi ninRut ...... RidavEthAn ninathiru vadimala riNaimana thiniluRa ninpat ...... RadaivEnO silaiyena vadamalai yudaiyavar aruLiya senjoR ...... siRupAlA thiraikada lidaivarum asuranai vathaiseytha senthiR ..

Sangu Abhishekam 2021

Image
Sangu Abhishekam 2021 Last Monday of Karthigai month, worshiping Lord Sarveshwara through paasupatha astra homam and Sangu abhishekam Date: December 13, Monday. 9.00 am to 12.30 pm Benefits : graha dosha nivaranam Atonement of sins committed unknowingly Puja donations : Rs.300/- for sankalpam Rs.1.,000/- for sangu prasadam For registration, https://www.chinmayasarveshwara.com/p/registration-form.html Contact : 95660 56993 --------------------------------------------- சங்கு அபிஷேகம் 2021 கார்த்திகை மாதம் கடைசி சோமவாரம் பாசுபத அஸ்திரம் ஹோமம் மற்றும் சங்கு அபிஷேகம் டிசம்பர் 13, திங்கட்கிழமை காலை 9.00 முதல் மதியம் 12.30 வரை பலன்கள் : கிரஹ தோஷ நிவாரணம் அறியாமல் செய்த பாவங்கள் விலகும் நன்கொடை Rs.300/- சங்கல்பத்கிற்கு Rs.1000/- சங்கு பிரசாதத்திற்கு பதிவு செய்ய, https://www.chinmayasarveshwara.com/p/registration-form.html தொடர்புக்கு 95660 56993

Thiruppugazh #125 surumpani kondal

Image
விளங்குகின்ற உனது கடப்ப மாலையை விரும்பி,  அழகிய தண்டையையும்,  பல இன்னிசை வகைகளை ஒலிக்கும் கிண்கிணியையும் அணிந்த திருவடிகளைத் தருவாயாக. சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு துரந்தெறி கின்ற ...... விழிவேலால் சுழன்றுசு ழன்று துவண்டுது வண்டு சுருண்டும யங்கி ...... மடவார்தோள் விரும்பிவ ரம்பு கடந்துந டந்து மெலிந்துத ளர்ந்து ...... மடியாதே விளங்குக டம்பு விழைந்தணி தண்டை விதங்கொள்ச தங்கை ...... யடிதாராய் பொருந்தல மைந்து சிதம்பெற நின்ற பொலங்கிரி யொன்றை ...... யெறிவோனே புகழ்ந்தும கிழ்ந்து வணங்குகு ணங்கொள் புரந்தரன் வஞ்சி ...... மணவாளா இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய் குரும்பைம ணந்த ...... மணிமார்பா இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று இலஞ்சிய மர்ந்த ...... பெருமாளே. ------------------------ surumpaNi koNdal nedungkuzhal kaNdu  thurantheRi kinRa ...... vizhivElAl suzhanRusu zhanRu thuvaNduthu vaNdu suruNduma yangi ...... madavArthOL virumpiva rampu kadanthuna danthu melinthutha Larnthu ...... madiyAthE viLanguka dampu vizhainthaNi thaNdai vithangko

Thiruppugazh #124 indhu kadhir

Image
முருகா! சிவஞான தரிசனம் அருள்வாய் இந்துகதிர்ச் சேரருணப் பந்திநடுத் தூணொளிபட் டின்பரசப் பாலமுதச் ...... சுவைமேவு எண்குணமுற் றோனடனச் சந்த்ரவொளிப் பீடகமுற் றெந்தைநடித் தாடுமணிச் ...... சபையூடே கந்தமெழுத் தோடுறுசிற் கெந்தமணப் பூவிதழைக் கண்டுகளித் தேயமுதக் ...... கடல்மூழ்கிக் கந்தமதித் தாயிரவெட் டண்டமதைக் கோல்புவனக் கண்டமதைக் காணஎனக் ...... கருள்வாயே திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட் டிந்தமெனக் காளமணித் ...... தவிலோசை சிந்தைதிகைத் தேழுகடற் பொங்கவரிச் சூர்மகுடச் செண்டுகுலைத் தாடுமணிக் ...... கதிர்வேலா குந்தியரித் தாழ்துளபச் செந்திருவைச் சேர்களபக் கொண்டல்நிறத் தோன்மகளைத் ...... தரைமீதே கும்பிடகைத் தாளமெடுத் தம்பொனுருப் பாவைபுகழ்க் கும்பகொணத் தாறுமுகப் ...... பெருமாளே. #################### inthukathirc cEraruNap panthinaduth thUNoLipat tinparasap pAlamuthac ...... cuvaimEvu eNkuNamuR ROnadanac canthravoLip peedakamuR Renthainadith thAdumaNic ...... capaiyUdE kanthamezhuth thOduRusiR kenthamaNap pUvithazhaik kaNdukaLith thEyamuthak

Thiruppugazh #123 dhAmA dhAmA lAbhA

Image
முருகா! அவமே அழியாமல் ஆண்டு அருள் தாமா தாமா லாபா லோகா  தாரா தாரத் ...... தரணீசா தானா சாரோ பாவா பாவோ நாசா பாசத் ...... தபராத யாமா யாமா தேசா ரூடா யாரா யாபத் ...... தெனதாவி யாமா காவாய் தீயே னீர்வா யாதே யீமத் ...... துகலாமோ காமா காமா தீனா நீணா காவாய் காளக் ...... கிரியாய்கங் காளா லீலா பாலா நீபா காமா மோதக் ...... கனமானின் தேமார் தேமா காமீ பாகீ தேசா தேசத் ...... தவரோதுஞ் சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே. ###################### thAmA thAmA lAbA lOkA thArA thArath ...... tharaNeesA thAnA sArO bAvA pAvO nAsA pAsath ...... thaparAtha yAmA yAmA thEsA rUdA yArA yApath ...... thenathAvi yAmA kAvAy theeyE neervA yAthE yeemath ...... thukalAmO kAmA kAmA theenA neeNA kAvAy kALak ...... kiriyAykang kALA leelA bAlA neepA kAmA mOthak ...... kanamAnin thEmAr thEmA kAmee pAkee thEsA thEsath ...... thavarOthum sEyE vELE pUvE kOvE thEvE thEvap ...... perumALE.

Thiruppugazh #122 anaivaru maruNda

Image
வள்ளி மணவாளரே!  செந்திலாண்டவரே!  குறிஞ்சிக் கிழவரே!  தொழுநோய் தொடர்ந்து அழியாமல்  உமது திருவடியைத் தொழ அருள்புரிவீர். அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப அமரஅ டிபின்தொ டர்ந்து ...... பிணநாறும் அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்பு மவலவுட லஞ்சு மந்து ...... தடுமாறி மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி மனவழி திரிந்து மங்கும் ...... வசைதீர மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கை கொஞ்சு மலரடி வணங்க என்று ...... பெறுவேனோ தினைமிசை சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பை திகழிரு தனம்பு ணர்ந்த ...... திருமார்பா ஜெகமுழு துமுன்பு தும்பி முகவனொ டுதந்தை முன்பு திகிரிவ லம்வந்த செம்பொன் ...... மயில்வீரா இனியக னிமந்தி சிந்து மலைகிழ வசெந்தில் வந்த இறைவகு ககந்த என்று ...... மிளையோனே எழுகட லுமெண்சி லம்பும் நிசிசர ருமஞ்ச அஞ்சு மிமையவ ரையஞ்ச லென்ற ...... பெருமாளே. ------------------------ anaivaru maruNda ruNdu kadithena vegunNdi yamba amara a dipintho darnthu ...... piNanARum azhugupiNi koNdu viNdu puzhuvuda nelumba lambu mavalavu dalanju ma