Posts

Showing posts from October, 2021

Thiruppugazh #121 naasarthang kadaiyadhanil

Image
சுவாமிநாதா! கீழ்மக்களோடு கூடாமல்,  உமது திருவடி பணிந்து உய்ய அருள். நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து ...... தடுமாறி ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி ...... மெலியாதே மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து ...... சுகமேவி மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று ...... பணிவேனோ வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற ...... குருநாதா வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு ...... மணவாளா கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து ...... புடைசூழுங் கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த ...... பெருமாளே. ############### nAsar tham kadaiyadhanil viravi nAn meththa nondhu ...... thadumARi nyAnamum keda adaiya vazhuviyA zhaththa zhundhi ...... meliyAdhE mA jagam thozhum unadhu pugazhinOr soR pagarndhu ...... sukamEvi mA maNam kamazhum iru kamala pAdhaththai nindru ...... paNivEnO vAchakam pugala oru paramar thA mechchukindra ...... gurunathA vAsavan tharu thiruvai oru dheyvA naikki rangu ...... maNavALA keechakan surartharuvu magizhumA aththi sandhu ...... pudai

Thiruppugazh #120 neelamkol

Image
உன்மீது ஆசை கொண்ட இந்தப் பெண்ணுக்கு, உனது நறுமணம் மிக்க மார்பில் தங்கி விளங்கும் மாலையைத் தந்து அருள்புரிவாயாக. நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும் மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா நாலந்த வேதத்தின் ...... பொருளோனே நானென்று மார்தட்டும் ...... பெருமாளே. ######################### neelang koL mEgaththin ...... mayilmeedhE nee vandha vAzhvaik ...... kaNdadhanAlE mAl koNda pEdhaikkun ...... maNanARum mAr thangu thAraiththandh ...... aruLvAyE vEl koNdu vElaip paNd ...... eRivOnE veerang koL sUrarkkung ...... kulakAlA nAl andha vEdhaththin ...... poruLOnE nAn endru mAr thattum ...... perumALE.

Thiruppugazh #119 ola maraigal

Image
முருகா! பொறி புலன்களால் துன்புற்று வாடாமல், ஒப்பற்ற உனது திருவடியை அடைந்து இன்புற அருள் ஓல மறைக ளறைகின்ற வொன்றது மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர் ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ ...... ரெவராலும் ஓத வரிய துரியங் கடந்தது போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும் ஊனு முயிரு முழுதுங் கலந்தது ...... சிவஞானம் சால வுடைய தவர்கண்டு கொண்டது மூல நிறைவு குறைவின்றி நின்றது சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ ...... னவியோமஞ் சாரு மநுப வரமைந்த மைந்தமெய் வீடு பரம சுகசிந்து இந்த்ரிய தாப சபல மறவந்து நின்கழல் ...... பெறுவேனோ வால குமர குககந்த குன்றெறி வேல மயில எனவந்து கும்பிடு வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் ...... களைவோனே வாச களப வரதுங்க மங்கல வீர கடக புயசிங்க சுந்தர வாகை புனையும் ரணரங்க புங்கவ ...... வயலூரா ஞால முதல்வி யிமயம் பயந்தமின் நீலி கவுரி பரைமங்கை குண்டலி நாளு மினிய கனியெங்க ளம்பிகை ...... த்ரிபுராயி நாத வடிவி யகிலம் பரந்தவ ளாலி னுதர முளபைங் கரும்புவெ ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் ...... பெருமாளே. ##

Thiruppugazh #118 por-padhaththinai

Image
திருத்தணிகை வேலா! பிறவித் துன்பத்தை அகற்றி, முத்தி நலம் அருளும் நாள் என்று வரும்? பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர் பொற்பு ரைத்து நெக்கு ருக்க ...... அறியாதே புத்த கப்பி தற்றை விட்டு வித்த கத்து னைத்து திக்க புத்தி யிற்க லக்க மற்று ...... நினையாதே முற்ப டத்த லத்து தித்து பிற்ப டைத்த கிர்த்ய முற்றி முற்க டைத்த வித்து நித்த ...... முழல்வேனை முட்ட விக்க டைப்பி றப்பி னுட்கி டப்ப தைத்த விர்த்து முத்தி சற்றெ னக்க ளிப்ப ...... தொருநாளே வெற்ப ளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த வித்த கத்தர் பெற்ற கொற்ற ...... மயில்வீரா வித்தை தத்வ முத்த மிழ்ச்சொ லத்த சத்தம் வித்த ரிக்கு மெய்த்தி ருத்த ணிப்பொ ருப்பி ...... லுறைவோனே கற்ப கப்பு னக்கு றத்தி கச்ச டர்த்த சித்ர முற்ற கற்பு ரத்தி ருத்த னத்தி ...... லணைவோனே கைத்த ரக்கர் கொத்து கச்சி னத்து வஜ்ர னுக்க மைத்த கைத்தொ ழுத்த றித்து விட்ட ...... பெருமாளே. ################################ poRpadhaththinai thudhiththu naRpadhaththil utrabakthar poRpu raiththu nekku rukka ...... aRiyAdhE puththaga

Thiruppugazh #117 isaindha erum

Image
முருகா! என் உயிர் கொண்டு செல்லும் சமயம் நான் அயரும்போது எனது துயரங்கள் நீங்குமாறு சிறந்த மயில் மேல் நீ வந்தருள வேண்டும். இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் ...... எழில்நீறும் இலங்கு நூலும் புலியத ளாடையு ...... மழுமானும் அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு ...... முடிமீதே அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய ...... குருநாதா உசந்த சூரன் கிளையுடன் வேரற ...... முனிவோனே உகந்த பாசங் கயிறொடு தூதுவர் ...... நலியாதே அசந்த போதென் துயர்கெட மாமயில் ...... வரவேணும் அமைந்த வேலும் புயமிசை மேவிய ...... பெருமாளே. ############### isaindha ERum kariyuri pOrvaiyum ...... ezhilneeRum ilangu nUlum puliyadhaL Adaiyu ...... mazhumAnum asaindha thOdum siramaNi mAlaiyu ...... mudimeedhE aNindha eesan parivudan mEviya ...... gurunAthA usandha sUran kiLaiyudan vEraRa ...... munivOnE ugandha pAsam kayiRodu dhUthuvar ...... naliyAdhE asandha pOdhen thuyarkeda mAmayil ...... varavENum amaindha vElum buyamisai mEviya ...... perumALE.

Thiruppugazh #116 kurudhi pulaal

Image
முருகா! ஐம்புல வேடரால் வளர்ந்து அழியாமல், பேரின்ப வீட்டினை அடைய அருள். குருதிபு லாலென்பு தோன ரம்புகள்  கிருமிகள் மாலம்பி சீத மண்டிய குடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பன ...... பொதிகாயக் குடிலிடை யோரைந்து வேட ரைம்புல அடவியி லோடுந்து ராசை வஞ்சகர் கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய ...... அதனாலே சுருதிபு ராணங்க ளாக மம்பகர் சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை துதியொடு நாடுந்தி யான மொன்றையு ...... முயலாதே சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய துரிசற ஆநந்த வீடு கண்டிட ...... அருள்வாயே ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும் நிருதரு மாவுங்க லோல சிந்துவும் உடைபட மோதுங்கு மார பங்கய ...... கரவீரா உயர்தவர் மாவும்ப ரான அண்டர்கள் அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள் உளமதில் நாளுங் கு  லாவி யின்புற ...... வுறைவோனே கருதிய ஆறங்க வேள்வி யந்தணர் அரிகரி கோவிந்த கேச வென்றிரு கழல்தொழு சீரங்க ராச னண்புறு ...... மருகோனே கமலனு மாகண்ட லாதி யண்டரு மெமது பிரானென்று தாள்வ ணங்கிய கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்

Thiruppugazh #115 variyAr karungkaN

Image
பாசபந்தத்தினால் மெலியாமல், சரணாரவிந்தத்தில் மகிழ வரியார் கருங்கண் ...... மடமாதர் மகவா சைதொந்த ...... மதுவாகி இருபோ துநைந்து ...... மெலியாதே இருதா ளினன்பு ...... தருவாயே பரிபா லனஞ்செய் ...... தருள்வோனே பரமே சுரன்ற ...... னருள்பாலா அரிகே சவன்றன் ...... மருகோனே அலைவா யமர்ந்த ...... பெருமாளே. ########################## variyAr karungkaN ...... madamAdhar magavA saithondha ...... madhuvAgi irupO dhunaindhu ...... meliyAdhE iruthA Linanbu ...... tharuvAyE paripA lanamsey ...... dharuLvOnE paramE suranthan ...... aruLbAlA arikE savanthan ...... marugOnE alaivAy amarndha ...... perumALE.