Posts

Showing posts from September, 2021

Thiruppugazh #114 aangudal valaindhu

Image
முருகா! இம்மையில் வேண்டிய பதங்கள் தந்து, மறுமையில் திருவடியை அருள்வாய் ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து ஆய்ஞ்சுதளர் சிந்தை ...... தடுமாறி ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து ஆண்டுபல சென்று ...... கிடையோடே ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து ஓய்ந்துணர் வழிந்து ...... உயிர்போமுன் ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து ஊன்றிய பதங்கள் ...... தருவாயே வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த வேந்திழையி னின்ப ...... மணவாளா வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச வேண்டிய பதங்கள் ...... புரிவோனே மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து மாண்புநெல் விளைந்த ...... வளநாடா மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற மாந்துறை யமர்ந்த ...... பெருமாளே. ###################### Ang kudal vaLaindhu neengu pal negizhndhu Aynju thaLar chinthai ...... thadumARi ArndhuLa kadangaL vAngavu maRindhu ANdu pala sendru ...... kidaiyOdE Ungirumal vandhu veengu kudal nondhu OyndhuNar vazhindhu ...... uyir pOmun Ongu mayil vandhu sENpera isaindhu Undriya padhangaL ...... tharuvAyE vEngaiyum uyarnd

Thiruppugazh #113 naadi thedi

Image
முருகா! அடியார்களோடு கூடி இருந்த ஞானவாழ்வினை அடைய அருள் நாடித் தேடித் ...... தொழுவார்பால் நானத் தாகத் ...... திரிவேனோ மாடக் கூடற் ...... பதிஞான வாழ்வைச் சேரத் ...... தருவாயே பாடற் காதற் ...... புரிவோனே பாலைத் தேனொத் ...... தருள்வோனே ஆடற் றோகைக் ...... கினியோனே ஆனைக் காவிற் ...... பெருமாளே. ###################### nAdith thEdith ...... thozhuvAr pAl nAnath thAgath ...... thirivEnO mAdak kUdaR ...... pathi nyAna vAzhvai sErath ...... tharuvAyE pAdaR kAdhal ...... purivOnE pAlaith thEnoth ...... aruLvOnE AdaR thOgaik ...... iniyOnE Anai kAviR ...... perumALE.

Thiruppugazh #112 ari-ayan ariyaadhavar

Image
சிவகுமாரரே! எனது பாதக மலங்கள் அகல, அடியேன் தேவரீரது திருப்பாத கமலங்களைத் தொழுது உய்யத் திருவருள் புரிவீர். அரியய னறியா தவரெரி புரமூ ணதுபுக நகையே ...... வியநாதர் அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ றழலையு மழுநேர் ...... பிடிநாதர் வரைமக ளொருகூ றுடையவர் மதனா கமும்விழ விழியே ...... வியநாதர் மனமகிழ் குமரா எனவுன திருதாள் மலரடி தொழுமா ...... றருள்வாயே அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல் அவனியை வலமாய் ...... வருவோனே அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல் அயில்தனை விசையாய் ...... விடுவோனே வரிசையொ டொருமா தினைதரு வனமே மருவியொர் குறமா ...... தணைவேடா மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர் வருதவ முநிவோர் ...... பெருமாளே. ######################## ariyayan aRiyA dhavar eripuramUN adhupuga nagai yEviya ...... nAthar avirsadai misaiyOr vanithaiyar pathi seeR azhalaiyu mazhu nEr ...... pidinAthar varai magaLoru kUR udaiyavar madhanA gamum vizha vizhi ...... yEviya nAthar manamagizh kumarA enavuna dhiru thAL malaradi thozhumAR ...... aruLvAyE aruvarai irukURida

Thiruppugazh #111 karuvenum maayai

Image
முருகா! உன் அடியார்களை வாழச்செய்ய அருள்பவனே, அற்பத்தனமாக நான் உழன்று திரிதல் தகுமோ? கருவெனு மாயை உருவினில் மூழ்கி  வயதள வாக ...... நிலமீதில் கலைதெரி வாணர் கலைபல நூல்கள் வெகுவித மாக ...... கவிபாடித் தெருவழி போகி பொருளெனு மாசை திரவியம் நாடி ...... நெடிதோடிச் சிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கி சிறுவித மாக ...... திரிவேனோ அருளநு போக குருபர னேஉன் அடியவர் வாழ ...... அருள்வோனே அரனிரு காதில் அருள்பர ஞாந அடைவினை ஓதி ...... அருள்பாலா வெருவிடு சூரர் குலஅடி வேரை விழவிடு சாசு ...... வதிபாலா மிடலுட லாளர் அடரசுர் மாள விடுமயில் வேல ...... பெருமாளே ################ karuvenu mAyai uruvinil mUzhki vayathaLa vAka ...... nilameethil kalaitheri vANar kalaipala nUlkaL vekuvitha mAka ...... kavipAdith theruvazhi pOki poruLenu mAsai thiraviyam nAdi ...... nedithOdi silainuthal mAthar mayalinil mUzhki siRuvitha mAka ...... thirivEnO aruLanu pOka gurupara nEun adiyavar vAzha ...... aruLvOnE araniru kAthil aruLpara njAna adaivinai Othi ...... aruLbAlA veruvidu cUrar kulAdi vErai v

Thiruppugazh #110 ari marigone

Image
முருகா! உபதேசப் பொருளாலே, உன்னை நான் நினைந்து அருள் பெறவேண்டும். அரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென் றறுமுக வேளே நமோவென் ...... றுனபாதம் அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென் றருண சொரூபா நமோவென் ...... றுளதாசை பரிபுர பாதா சுரேசன் றருமக ணாதா வராவின் பகைமயில் வேலா யுதாடம் ...... பரநாளும் பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன் பதிபசு பாசோப தேசம் ...... பெறவேணும் கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங் கடினசு ராபான சாமுண் ...... டியுமாடக் கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனா பதீயென் களமிசை தானேறி யேயஞ் ...... சியசூரன் குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங் குடல்கொள வேபூச லாடும் ...... பலதோளா குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங் குளிர்வய லூரார மேவும் ...... பெருமாளே. ########################## arimaru gOnE namOvendr aRudhiyi lAnE namOvendr aRumuga vELE namOvendr ...... una pAdham arahara sEyE namOvendr imayavar vAzhvE namOvendr aruNa sorUpA namOvendr ...... uLadhAsai paripura pAdhA surEsan tharumagaL nAthA varAvin

Thiruppugazh #109 karuvin uruvaagi

Image
முருகா! அடியேன் பிறந்து, கலைகள் பல தெரிந்து, மதனனால் கருத்து அழிந்து, சிவநாமங்களை நினையாமல், ஆக்கைக்கே இரை தேடி உழலாமல் ஆண்டருள்வீர். கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து  கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று அறுசமய நீதி யொன்று ...... மறியாமல் அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர் உலகளவு மால்ம கிழ்ந்த ...... மருகோனே உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க உறைபுகலி யூரி லன்று ...... வருவோனே பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற பரமனரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே. ####################### karuvinuru vAgi vandhu vayadhaLavi lEva Larndhu kalaigaLpala vEthe rindhu ...... madhanAlE kariyakuzhal mAdhar thangaL adisuvadu mArbu dhaindhu kavalaiperi dhAgi nondhu ...... m

Thiruppugazh #108 vidam-adaisu

Image
விடமடைசு வேலை அமரர்படை சூலம் விசையன்விடு பாண ...... மெனவேதான் விழியுமதி பார விதமுமுடை மாதர் வினையின்விளை வேதும் ...... அறியாதே கடியுலவு பாயல் பகலிரவெ னாது கலவிதனில் மூழ்கி ...... வறிதாய கயவனறி வீனன் இவனுமுயர் நீடு கழலிணைகள் சேர ...... அருள்வாயே இடையர்சிறு பாலை திருடிகொடு போக இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே இதயமிக வாடி யுடையபிளை நாத கணபதியெ னாம ...... முறைகூற அடையலவர் ஆவி வெருவஅடி கூர அசலுமறி யாமல் ...... அவரோட அகல்வதென டாசொல் எனவுமுடி சாட அறிவருளும் ஆனை ...... முகவோனே. ######################## vidamadaisu vElai amararpadai cUlam  visaiyanvidu pANa ...... menavEthAn vizhiyumathi pAra vithamumudai mAthar vinaiyinviLai vEthum ...... aRiyAthE kadiyulavu pAyal pakalirave nAthu kalavithanil mUzhki ...... vaRithAya kayavanaRi veenan ivanumuyar needu kazhaliNaikaL sEra ...... aruLvAyE idaiyarsiRu pAlai thirudikodu pOka iRaivanmakaL vAymai ...... aRiyAthE ithayamika vAdi yudaiyapiLai nAtha kaNapathiye nAma ...... muRaikURa adaiya

Thiruppugazh #107 makaramodu uRai-kuzhai

Image
மகரமொ டுறுகுழை யோலை காட்டியு  மழைதவழ் வனைகுழல் மாலை காட்டியும் வரவர வரஇத ழூற லூட்டியும் ...... வலைவீசும் மகரவி ழிமகளிர் பாடல் வார்த்தையில் வழிவழி யொழுகுமு பாய வாழ்க்கையில் வளமையி லிளமையில் மாடை வேட்கையில் ...... மறுகாதே இகலிய பிரமக பால பாத்திர மெழில்பட இடுதிரு நீறு சேர்த்திற மிதழியை யழகிய வேணி யார்த்ததும் ...... விருதாக எழில்பட மழுவுடன் மானு மேற்றது மிசைபட இசைதரு ஆதி தோற்றமு மிவையிவை யெனவுப தேச மேற்றுவ ...... தொருநாளே ஜகதல மதிலருள் ஞான வாட்கொடு தலைபறி யமணர்ச மூக மாற்றிய தவமுனி சகமுளர் பாடு பாட்டென ...... மறைபாடி தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தாவெ னாச்சில சபதமொ டெழுவன தாள வாச்சிய ...... முடனேநீள் அகுகுகு குகுவென ஆளி வாய்ப்பல அலகைக ளடைவுட னாடு மாட்டமு மரனவ னுடனெழு காளி கூட்டமு ...... மகலாதே அரிதுயில் சயனவி யாள மூர்த்தனு மணிதிகழ் மிகுபுலி யூர்வி யாக்ரனு மரிதென முறைமுறை யாடல் காட்டிய ...... பெருமாளே. ################## makaramo duRukuzhai yOlai kAttiyu mazhait

Thiruppugazh #106 udukka thugil

Image
உடுக்கத் துகில்வேணு நீள்பசி  யவிக்கக் கனபானம் வேணுநல் ஒளிக்குப் புனலாடை வேணுமெய் ...... யுறுநோயை ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள் இருக்கச் சிறுநாரி வேணுமொர் படுக்கத் தனிவீடு வேணுமிவ் ...... வகையாவுங் கிடைத்துக் க்ருஹவாசி யாகிய மயக்கக் கடலாடி நீடிய கிளைக்குப் பரிபால னாயுயி ...... ரவமேபோம் க்ருபைச்சித் தமுஞான போதமு மழைத்துத் தரவேணு மூழ்பவ கிரிக்குட் சுழல்வேனை யாளுவ ...... தொருநாளே குடக்குச் சிலதூதர் தேடுக வடக்குச் சிலதூதர் நாடுக குணக்குச் சிலதூதர் தேடுக ...... வெனமேவிக் குறிப்பிற் குறிகாணு மாருதி யினித்தெற் கொருதூது போவது குறிப்பிற் குறிபோன போதிலும் ...... வரலாமோ அடிக்குத் திரகார ராகிய அரக்கர்க் கிளையாத தீரனு மலைக்கப் புறமேவி மாதுறு ...... வனமேசென் றருட்பொற் றிருவாழி மோதிர மளித்துற் றவர்மேல் மனோகர மளித்துக் கதிர்காம மேவிய ...... பெருமாளே. ################ udukka thugil vENu neeL pasi avikka ganapAnam vENunal oLikkup punalAdai vENu mey ...... uRunOyai ozhikkap parikA