Thiruppugazh giRimozhi கிறி மொழி

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்

கிறிமொழிக் கிருதரை (திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!திருவடியில் அணுக அருள்.

தனதனத் தனதனத் தனதனத் 
தனதனத் தனதனத் தனதனத் ...... தனதான


......... பாடல் .........

கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்
கெடுபிறப் பறவிழிக் ...... கிறபார்வைக்

கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்
கிகள்தமைச் செறிதலுற் ...... றறிவேதும்

அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்
றறவுநெக் கழிகருக் ...... கடலூடே

அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்
றடியிணைக் கணுகிடப் ...... பெறுவேனோ

பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்
பொறியிலச் சமணரத் ...... தனைபேரும்

பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப்
புகலியிற் கவுணியப் ...... புலவோனே

தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்
தவர்திருப் புதல்வநற் ...... சுனைமேவுந்

தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத்
தணியினிற் சரவணப் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


கிறிமொழிக் கிருதரை, பொறிவழிச் செறிஞரை,
     கெடுபிறப்பு அற விழிக் ...... கிற பார்வைக்

கெடு மடக் குருடரை, திருடரை, சமய தர்க்
     கிகள் தமை, செறிதல் உற்று, ...... அறிவு ஏதும்

அறிதல் அற்றுயர்தல் உற்றுவிழ்தல்அற்றுருகல்உற்று,
     அறவும் நெக்குழி கருக் ...... கடல் ஊடே

அமிழ்தல் அற்றுழுதல் உற்றுணர் நலத்து உயர்தல் உற்று,
     அடியிணைக்கு அணுகிடப் ...... பெறுவேனோ?

பொறி உடைச் செழியன் வெப்பு ஒழிதர, பறிதலைப்
     பொறிஇல் அச் சமணர் அத் ...... தனைபேரும்

பொடிபட, சிவமணப் பொடி பரப்பியதிருப்
     புகலியில் கவுணியப் ...... புலவோனே!

தறி வளைத்து உறநகைப் பொறி எழ, புரம் எரித்-
     தவர் திருப்புதல்வ! நல் ...... சுனைமேவும்

தனிமணக் குவளை நித்தமும் மலர்த் தருசெருத்
     தணியினில் சரவணப் ...... பெருமாளே.

Comments

Popular posts from this blog

Murugavel panniru Thirumurai

Lord Muruga 1000 names

Chinmaya Mission Tiruvallur

Bhagavad Gita Summary Classes