Thiruppugazh #105 ekamaai palavaai
ஏக மாய்ப்பல வாய்ச்சிவ போக மாய்த்தெளி வாய்ச்சிவ மீதெ னாக்குரு வார்த்தையை ...... யுணராதே ஏழு பார்க்கும்வி யாக்கிரன் யானெ னாப்பரி தேர்க்கரி யேறு மாப்பிறு மாப்புட ...... னரசாகி தோகை மார்க்கொரு காற்றொலை யாத வேட்கையி னாற்கெடு சோர்வி னாற்கொடி தாக்கையை ...... யிழவாமுன் சோதி காட்டவ ராச்சுத நாத னார்க்கருள் போற்றிய தூரி தாப்பர மார்த்தம ...... தருள்வாயே நாக மேற்றுயில் வார்க்கய னான பேர்க்கரி யார்க்கொரு ஞான வார்த்தையி னாற்குரு ...... பரனாய நாத நாட்டமு றாப்பல காலும் வேட்கையி னாற்புகல் நாவ லோர்க்கரு ளாற்பத ...... மருள்வாழ்வே வேக மேற்கொ ளராப்புடை தோகை மேற்கொடு வேற்கொடு வீர மாக்குலை யாக்குல ...... வரைசாய மேலை நாட்டவர் பூக்கொடு வேல போற்றியெ னாத்தொழ வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே. #################### Eka mAyppala vAycciva pOka mAyththeLi vAycciva meethe nAkkuru vArththaiyai ...... yuNarAthE Ezhu pArkkumvi yAkkiran yAne nAppari thErkkari yERu mAppiRu mAppuda ...... narasAki thOkai mArkkoru kAtRolai yAtha vEtkaiyi nARkedu sOrvi nARkodi thAkkaiyai ...