Thiruppugazh pagalavan okkum பகலவன் ஒக்கும்
பகலவ னொக்குங் கனவிய ரத்னம் பவளவெண் முத்தந் ...... திரமாகப் பயிலமு லைக்குன் றுடையவர் சுற்றம் பரிவென வைக்கும் ...... பணவாசை அகமகிழ் துட்டன் பகிடிம ருட்கொண் டழியும வத்தன் ...... குணவீனன் அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண் டலைதலொ ழித்தென் ...... றருள்வாயே சகலரு மெச்சும் பரிமள பத்மந் தருணப தத்திண் ...... சுரலோகத் தலைவர்ம கட்குங் குறவர்ம கட்குந் தழுவஅ ணைக்குந் ...... திருமார்பா செகதல மெச்சும் புகழ்வய லிக்குந் திகுதிகெ னெப்பொங் ...... கியவோசை திமிலைத விற்றுந் துமிகள்மு ழக்குஞ் சிரகிரி யிற்கும் ...... பெருமாளே. பதம் பிரித்தல் பகலவன் ஒக்கும் கனவிய ரத்னம் பவள வெண் முத்தம் ...... திரமாகப் பயில முலைக் குன்று உடையவர் சுற்றம் பரிவு என வைக்கும் ...... பண ஆசை அக மகிழ் துட்டன் , பகிடி , மருள் கொண்டு அழியும் அவத்தன் , ...... குண ஈனன் , அறிவுஇலி , சற்றும் பொறை இலி , பெற்று உண்டு அலைதல் ஒழித்து என்று ...... அருள்வாயே. ச...