paalo thaeno Thiruppugazh பாலோ தேனோ பாகோ (திருவாரூர்) திருப்புகழ்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாலோ தேனோ பாகோ (திருவாரூர்) முருகா! தாய் (தந்தை) மனம் மகிழ வாழ்ந்து ஈடேற அருள்வாய். தானா தானா தானா தானா தானா தானத் ...... தனதான பாலோ தேனோ பாகோ வானோர் பாரா வாரத் ...... தமுதேயோ பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ பானோ வான்முத் ...... தெனநீளத் தாலோ தாலே லோபா டாதே தாய்மார் நேசத் ...... துனுசாரந் தாரா தேபே ரீயா தேபே சாதே யேசத் ...... தகுமோதான் ஆலோல் கேளா மேலோர் நாண்மா லானா தேனற் ...... புனமேபோய் ஆயாள் தாள்மேல் வீழா வாழா ஆளா வேளைப் ...... புகுவோனே சேலோ டேசே ராரால் சாலார் சீரா ரூரிற் ...... பெருவாழ்வே சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே. பதம் பிரித்தல் பாலோ ? தேனோ ? பாகோ ? வானோர் பாராவாரத்து ...... அமுதேயோ ? பாரோர் சீரோ ? வேளேர் வாழ்வோ ? பானோ ? வான்முத்து ...... என , நீளத் தாலோ தாலேலோ பாடாதே , தாய்மார் நேசத்து ...... உனு சாரம் தாராதே , பேர் ஈயாதே , பே- சாதே , ஏசத் ...... தகுமோதான் ? ஆலஓல் கேளா , மேல்ஓர் நாள் , மால் ஆனாது , ஏனல் ...... புனமேபோய