Thiruppugazh surudhiyAy சுருதியாய்





தனன தானன தானன தானன 
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

சுருதி யாயிய லாயியல் நீடிய
தொகுதி யாய்வெகு வாய்வெகு பாஷைகொள்
தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு ...... துணையாய்மேல்

துறவு மாயற மாய்நெறி யாய்மிகு
விரிவு மாய்விளை வாயருள் ஞானிகள்
சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு ...... சுடர்வீசும்

பருதி யாய்மதி யாய்நிறை தாரகை
பலவு மாய்வெளி யாயொளி யாயெழு
பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு ...... பரமாகும்

பரம மாயையி னேர்மையை யாவரு
மறியொ ணாததை நீகுரு வாயிது
பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு ...... பயனோதான்

கருது மாறிரு தோள்மயில் வேலிவை
கருதொ ணாவகை யோரர சாய்வரு
கவுணி யோர்குல வேதிய னாயுமை ...... கனபாரக்

களப பூண்முலை யூறிய பாலுணு
மதலை யாய்மிகு பாடலின் மீறிய
கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள் ...... கழுவேறக்

குருதி யாறெழ வீதியெ லாமலர்
நிறைவ தாய்விட நீறிட வேசெய்து
கொடிய மாறன்மெய் கூனிமி ராமுனை ...... குலையாவான்

குடிபு கீரென மாமது ராபுரி
யியலை யாரண வூரென நேர்செய்து
குடசை மாநகர் வாழ்வுற மேவிய ...... பெருமாளே.

பதம் பிரித்தல்
 
சுருதிஆய், இயலாய், இயல் நீடிய
     தொகுதியாய்வெகுவாய்வெகு பாஷைகொள்
     தொடர்புமாய்டியாய், நடுவாய்மிகு.....துணையாய்,மேல்

துறவுமாய், அறமாய், நெறியாய்மிகு
     விரிவுமாய்விளைவாய்ருள் ஞானிகள்
     சுகமுமாய்முகிலாய்மழையாய்ழு ...... சுடர்வீசும்

பருதியாய்மதியாய்நிறை தாரகை
     பலவுமாய்வெளியாய் ஒளியாய்ழு
     பகல் இரா இலையாய், நிலையாய், மிகு ...... பரம்ஆகும்

பரம மாயையின் நேர்மையை, யாவரும்
     அறிய ஒணாததை, நீ குருவாய் இது
     பகருமாறு செய்தாய்முதல் நாளஎஉறு ...... பயனோதான்?

கருதும் ஆறுஇரு தோள்,மயில், வேல் இவை
     கருத ஒணாவகை ஓர்அரசாய் வரு,
     கவுணியோர் குலவேதியனாய், உமை ...... கனபாரக்

களப பூண்முலை ஊறிய பால் உணும்
     மதலையாய்மிகு பாடலின் மீறிய
     கவிஞனாய்விளையாடு டம், வாதிகள் ...... கழு ஏறக்

குருதி ஆறு எழ, வீதி எலா மலர்
     நிறைவதாய் விட, நீறு இடவே செய்து,
     கொடிய மாறன் மெய்கூன் நிமிராமுனை ......குலையா வான்

குடிபுகீர் என மா மதுராபுரி
     இயலை ஆரண ஊர் என நேர்செய்து,
     குடசை மாநகர் வாழ்வுற மேவிய ...... பெருமாளே.

Comments

Popular posts from this blog

alagu il avuNarai Thiruppugazh அலகு இல் அவுணரை திருப்புகழ்

paalo thaeno Thiruppugazh பாலோ தேனோ பாகோ (திருவாரூர்) திருப்புகழ்

Lord Muruga 1000 names

Thiruppugazh Olamittu iraiththu ஓலமிட்டு இரைத்து