Posts

Showing posts from May, 2022

Thiruppugazh #155 manai makkal

Image
வள்ளிமணவாளரே! தேவர் சிறை மீட்ட தேவ தேவரே! மனைமக்கள் மீதுள்ள பற்றையறுத்து, அவகதி செல்லாமல் சிவகதி பெற அருள்புரிவீர் . மனைமக்கள் சுற்ற ...... மெனுமாயா வலையைக்க டக்க ...... அறியாதே வினையிற்செ ருக்கி ...... யடிநாயேன் விழலுக்கி றைத்து ...... விடலாமோ சுனையைக்க லக்கி ...... விளையாடு சொருபக்கு றத்தி ...... மணவாளா தினநற்ச ரித்ர ...... முளதேவர் சிறைவெட்டிவிட்ட ...... பெருமாளே

Thiruppugazh #154 anju-vidha-bhudham

Image
முருகா! அருந்தமிழால் உம்மைப் பாடி வழிபட்டு, வீடுபேற்றை அடைய அருள். அஞ்சுவித பூத முங்கரண நாலு மந்திபகல் யாது ...... மறியாத அந்தநடு வாதி யொன்றுமில தான அந்தவொரு வீடு ...... பெறுமாறு மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர் மங்கைதனை நாடி ...... வனமீது வந்தசர ணார விந்தமது பாட வண்டமிழ்வி நோத ...... மருள்வாயே குஞ்சரக லாப வஞ்சியபி ராம குங்குமப டீர ...... வதிரேகக் கும்பதன மீது சென்றணையு மார்ப குன்றுதடு மாற ...... இகல்கோப வெஞ்சமர சூர னெஞ்சுபக வீர வென்றிவடி வேலை ...... விடுவோனே விம்பமதில் சூழு நிம்பபுர வாண விண்டலம கீபர் ...... பெருமாளே.

Thiruppugazh #153 muthu therikka

Image
முத்துத் தெறிக்க (திருத்தணிகை) திருத்தணிகை வேலா! உன்னை நினைந்து வருந்தும் இந்தத் தலைவி முன் இன்றே திருத்தணிகையில் வந்து அருள் . முத்துத்தெ றிக்கவள ரிக்குச்சி லைக்கைமதன்      முட்டத்தொ டுத்த ...... மலராலே முத்தத்தி ருச்சலதி முற்றத்து தித்தியென      முற்பட்டெ றிக்கு ......நிலவாலே எத்தத்தை யர்க்குமித மிக்குப்பெ ருக்கமணி      இப்பொற்கொ டிச்சி ...... தளராதே எத்திக்கு முற்றபுகழ் வெற்றித்தி ருத்தணியில்      இற்றைத்தி னத்தில் ...... வரவேணும் மெத்தச்சி னத்துவட திக்குக்கு லச்சிகர      வெற்பைத்தொ ளைத்த ...... கதிர்வேலா மெச்சிக்கு றத்திதன மிச்சித் தணைத்துருகி      மிக்குப்ப ணைத்த ...... மணிமார்பா மத்தப்ர மத்தரணி மத்தச்ச டைப்பரமர்      சித்தத்தில் வைத்த ...... கழலோனே வட்டத்தி ரைக்கடலில் மட்டித்தெ திர்த்தவரை      வெட்டித்து ணித்த ...... பெருமாளே. பதம் பிரித்தல் முத்துத் தெறிக்க வளர் இக்குச் சிலைக்கை மதன்      முட்டத் தொடுத்த ...... மலராலே, முத்தத் திருச்சலதி முற்றத்து உதித் தி என      முற்பட்டு எறிக்கும் ......நிலவாலே, எத் தத்தையர்க்கும் இதமிக்குப் பெருக்கம் அணி      இப்பொன் கொடிச்சி ...... தளராதே,

Thiruppugazh #152 Thimira udhadhi

Image
திமிர உததி (பழநி) திருப்பழநி ஆண்டவரே! அடியேனுக்கு மறுபிறப்பு இருந்தால், செவிடு, குருடு, அங்க ஈனம், வறுமை வேண்டாம்; சீரிய தேவசரீரம், சீரியகுலம், மெய்யறிவு, நிறைவு இவற்றைத் தந்தருள்வீர். திமிர வுததி யனைய நரக      செனன மதனில் ...... விடுவாயேல் செவிடு குருடு வடிவு குறைவு      சிறிது மிடியு ...... மணுகாதே அமரர் வடிவு மதிக குலமு      மறிவு நிறையும் ...... வரவேநின் அருள தருளி யெனையு மனதொ      டடிமை கொளவும் ...... வரவேணும் சமர முகவெ லசுரர் தமது      தலைக ளுருள ...... மிகவேநீள் சலதி யலற நெடிய பதலை      தகர அயிலை ...... விடுவோனே வெமர வணையி லினிது துயிலும்      விழிகள் நளினன் ...... மருகோனே மிடறு கரியர் குமர பழநி      விரவு மமரர் ...... பெருமாளே பதம் பிரித்தல் திமிர உததி அனைய நரக      செனனம் அதனில் ...... விடுவாயேல், செவிடு, குருடு, வடிவு குறைவு,      சிறிது மிடியும் ......     அணுகாதே, அமரர் வடிவும், அதிக குலமும்,      அறிவும் நிறையும் ......     வரவேநின், அருளது அருளி எனையும் மனதொடு      அடிமை கொளவும் ...... வரவேணும். சமர முகவெல் அசுரர் தமது      தலைகள் உருள ......   மிகவே, நீள் சலதி அலற, நெட