Posts

Showing posts from December, 2021

Thiruppugazh #134 Eththanai kodi kodi

Image
எத்தனை கோடி  (வைத்தீசுரன் கோயில் - திருப்புள்ளிருக்குவேளூர்) முருகா! திருவடி இன்பத்தை அருள்வாய். ------------------ எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி யெத்தனை கோடி போன ...... தளவேதோ இப்படி மோக போக மிப்படி யாகி யாகி யிப்படி யாவ தேது ...... இனிமேலோ சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச் சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது சித்திர ஞான பாத ...... மருள்வாயே நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு பத்திர பாத நீல ...... மயில்வீரா பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே. --------------------------- eththanai kOdi kOdi vittuda lOdi yAdi eththanai kOdi pOnadh ...... aLavEdhO ippadi mOha bOgam ippadi yAgi yAgi ippadi yAvadhEdhu ...... inimElO chiththidil cheechi cheechi kuththira mAya mAyai sikkini lAyu mAyum ...... adiyEnai chiththini lAda

Thiruppugazh #133 kanaiththu adhirkkum

Image
திருத்தணிகை வேலா! உன்னை நினைந்து உருகும் ஆன்மாவாகிய இந்த தலைவியை உன்னுடன் சேர்த்து அருவாய். கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட ...... லொன்றினாலே கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு ...... திங்களாலே தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச ...... ரங்களாலே தகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச ...... ழங்கலாமோ தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம ...... டந்தைகேள்வா திருத்த ணிப்பதிக் குன்றின் மேற்றிகழ் ...... கந்தவேளே பனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய ...... மங்கைபாகா படைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள் ...... தம்பிரானே. kanaiththa dhirkkumip pongu kArkkadal ...... ondrinAlE kaRuththaRa sivath thangi vAyththezhu ...... thingaLAlE thani karuppuviR kondu veezhththa ...... sarangaLAlE thagaith thoruththiyeyth thingu yAkkai ...... sazhangalAmO thinaip punaththinai paNdukAththa ...... madandhai kELvA thiruththaNi padhi kundrin mEtrigazh ...... kandha vELE panaik karak kayath thaNdar pOtriya ...... mangai bAgA padaith thaLith thazhikkum thrimUrthigaL ...... thambirAnE.

Thiruppugazh #132 piraviyaana sadamirangi

Image
முருகா! ஞானமலர்களால் தேவரீரது திருவடியை வழிபட்டு, மோன நிலையை அடைந்து, நன்மை பெற அருள்வாய் பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து பிணிக ளான துயரு ழன்று ...... தடுமாறிப் பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்தி பிடிப டாத ஜனன நம்பி ...... யழியாதே நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த நளின பாத மெனது சிந்தை ...... யகலாதே நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி நலன தாக அடிய னென்று ...... பெறுவேனோ பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்று பொருநி சாச ரனைநி னைந்து ...... வினைநாடிப் பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து புளக மேவ தமிழ்பு னைந்த ...... முருகோனே சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல் சிலையி ராம னுடனெ திர்ந்து ...... சமராடிச் செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த சிறுவை மேவி வரமி குந்த ...... பெருமாளே. piRaviyAna jadam iRangi vazhi ilAdha thuRai seRindhu piNigaLAna thuyar uzhandru ...... thadumARip perugu theeya vinaiyi nondhu gathigaL thORu malai porundhi pidi padAdha janana nam

Thiruppugazh #131 kala kalenachchila

Image
முருகா! நாயடியேனை தேவரீரது அடியவர் திருக்கூட்டத்தில் சேர்த்து, திருவடியைத் தந்து அருள். கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ  தொழிவ துனைச்சிறி ...... துரையாதே கருவழிதத்திய மடுவ தனிற்புகு கடுநர குக்கிடை ...... யிடைவீழா உலகு தனிற்பல பிறவி தரித்தற வுழல்வது விட்டினி ...... யடிநாயேன் உனதடி மைத்திரள் அதனினு முட்பட வுபய மலர்ப்பத ...... மருள்வாயே குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட நிசிசர னைப்பொரு ...... மயில்வீரா குணதர வித்தக குமர புனத்திடை குறமக ளைப்புணர் ...... மணிமார்பா அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு மணிதிரு வக்கரை ...... யுறைவோனே அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன அவைதரு வித்தருள் ...... பெருமாளே. ########################### kala kalena sila kalaigaL pidhatruvadh ozhivadh unai siRidh ...... uRaiyAdhE karuvazhi thaththiya maduva thaniR pugu kadu naraguk idai ...... idaiveezhA ulagu thaniR pala piRavi dharith aRa uzhal vadhu vittini ...... adinAyEn unadhadi maith thiraL adhaninum utpada ubaya malarp padham ...... aruLvAyE kulagiri pottezha alai kadal v

Thiruppugazh #130 alasal-adaindha

Image
வள்ளிமலை யாண்டவனே! என் புதல்விக்கு உனது கடப்ப மலர் மாலையைக் கொடுத்தருள்வீர். -------------------------------------- அல்லசல டைந்த வில்லடல நங்கன் அல்லிமல ரம்பு ...... தனையேவ அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற லையமது கிண்ட ...... அணையூடே சொல்லுமர விந்த வல்லிதனி நின்று தொல்லைவினை யென்று ...... முனியாதே துய்யவரி வண்டு செய்யமது வுண்டு துள்ளியக டம்பு ...... தரவேணும் கல்லசல மங்கை யெல்லையில்வி ரிந்த கல்விகரை கண்ட ...... புலவோனே கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று கல்லலற வொன்றை ...... யருள்வோனே வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச வல்லமைதெ ரிந்த ...... மயில்வீரா வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று வள்ளியைம ணந்த ...... பெருமாளே. -------------------------------------- allasala daintha villadala nangan allimala rampu ...... thanaiyEva aLLiyeri sintha piLLaimathi thenRa laiyamathu kiNda ...... aNaiyUdE sollumara vintha vallithani ninRu thollaivinai yenRu ...... muniyAthE thuyyavari vaNdu seyyamathu vuNdu thuLLiyaka dampu ...... tharavENum kallasala mangai ye

Thiruppugazh #129 kadalai pori avarai

Image
விநாயகமூர்த்தியின் துணைவரே! மயில் வாகனரே! கஜவல்லி வனவல்லி சமேதரே! அசுரரை அழித்து தேவர் சிறைமீட்ட வேற்படையினரே! சரவணபவ! சிவமூர்த்திக்கும், சுரநதிக்கும், கௌரியம்மைக்கும் திருப்புதல்வரே!  பழனாபுரிப் பெருமாளே! கடலை பொரியவரை பலக னிகழைநுகர் கடின குடவுதர ...... விபரீத கரட தடமுமத நளின சிறுநயன கரிணி முகவரது ...... துணைவோனே வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில் வலம்வ ருமரகத ...... மயில்வீரா மகப திதருசுதை குறமி னொடிருவரு மருவு சரசவித ...... மணவாளா அடல சுரர்கள்குல முழுது மடியவுய ரமரர் சிறையைவிட ...... எழில்மீறும் அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு மரக ரசரவண ...... பவலோலா படல வுடுபதியை யிதழி யணிசடில பசுப திவரநதி ...... அழகான பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை பழநி மலையில்வரு ...... பெருமாளே. ------------------------------------ kadalai poriyavarai palaka nikazhainugar kadina kudaudhara ...... vipareetha karada thadamumadha naLina siRunayana kariNi mukavaradhu ...... thuNaivOnE vadava raiyinmugadu adhira orunodiyil valamva rumarakatha ...... mayilveerA mag

Thiruppugazh #128 kariya periya

Image
காலன் வருமுன் திருவடி தரிசனத்தைப் பெறவேணும். கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய ...... திரிசூலன் கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள் கழிய முடுகி ...... யெழுகாலந் திரியு நரியு மெரியு முரிமை தெரிய விரவி ...... யணுகாதே செறிவு மறிவு முறவு மனைய திகழு மடிகள் ...... தரவேணும் பரிய வரையி னரிவை மருவு பரம ரருளு ...... முருகோனே பழன முழவர் கொழுவி லெழுது பழைய பழநி ...... யமர்வோனே அரியு மயனும் வெருவ வுருவ அரிய கிரியை ...... யெறிவோனே அயிலு மயிலு மறமு நிறமும் அழகு முடைய ...... பெருமாளே -------------------------- kariya periya erumai kadavu kadiya kodiya ...... thirisUlan kaRuvi iRugu kayiRo duyirgaL kazhiya mudugi ...... ezhukAlan thiriyu nariyum eriyum urimai theriya viravi ...... aNugAdhE seRivum aRivum uRavum anaiya thigazhum adigaL ...... tharavENum pariya varaiyin arivai maruvu paramar aruLu ...... murugOnE pazhana muzhavar kozhuvil ezhudhu pazhaiya pazhani ...... amarvOnE ariyum ayanum veruva uruva ariya giriyai ...... eRivOnE ayil