Thiruppugazh Aragara-sivan-ari அரகர சிவனரி
அரகர சிவனரி அயனிவர் பரவிமுன்
அறுமுக சரவண ...... பவனேயென்று
அநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
அநலென எழவிடும் ...... அதிவீரா
பரிபுர கமலம தடியிணை யடியவர்
உளமதில் உறவருள் ...... முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுக
பரமன திருசெவி ...... களிகூர
உரைசெயும் ஒருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர ...... வுயர்வாய
உலகம னலகில வுயிர்களும் இமையவர்
அவர்களும் உறுவர ...... முநிவோரும்
பரவிமுன் அநுதின மனமகிழ் வுறவணி
பணிதிகழ் தணிகையில் ...... உறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையும்
இருபுடை யுறவரு ...... பெருமாளே.
Very nice explanation 👌
ReplyDeleteMuruga Muruga Muruga
Velayudha🌷🌷🌷🙏🙏🙏