Thiruppugazh #148 Edhu buddhi aiya
திருத்தணிகை வேலா!
நீயே எனது தந்தை.
மகனாகிய என்னை ஆதரித்து அருள் புரிவாய்.
நீயே எனது தந்தை.
மகனாகிய என்னை ஆதரித்து அருள் புரிவாய்.
ஏது புத்தி ஐயா எனக்கு? இனி
யாரை நத்திடுவேன்? அவத்தினிலே
இறத்தல் கொலோ? எனக்கு நீ ...... தந்தை தாய்
என்றே இருக்கவும், நானும் இப்படியே
தவித்திடவோ? சகத்தவர்
ஏசலில் படவோ? நகைத்தவர் ...... கண்கள்காணப்
பாதம் வைத்து, இடை ஆதரித்து, எனை
தாளில் வைக்க நீயே மறுத்திடில்,
பார் நகைக்கும் ஐயா, தகப்பன் முன் ......மைந்தன்ஓடிப்
பால் மொழிக் குரல் ஓலம் இட்டிடில்
யார் எடுப்பது எனா வெறுத்து அழ,
பார் விடுப்பர்களோ? எனக்கு இது ...... சிந்தியாதோ?
ஓதம் உற்று எழு பால் கொதித்தது
போல, எட்டிகை நீச முட்டரை
ஓட வெட்டிய பாநு சத்தி கை ...... எங்கள்கோவே!
ஓத மொய்ச்சடை ஆட உற்று, அமர்
மான் மழுக்கரம் ஆட, பொற்கழல்
ஓசை பெற்றிடவே நடித்தவர் ...... தந்தவாழ்வே!
மா தினைப்புன மீது இருக்கும், மை
வாள்விழிக் குறமாதினை, திரு
மார்பு அணைத்த மயூர! அற்புத! ...... கந்தவேளே!
மாரன் வெற்றிகொள் பூ முடிக் குழ-
லார் வியப்பு உற, நீடு மெய்த்தவர்
வாழ் திருத்தணி மாமலைப் பதி ...... தம்பிரானே.
Comments
Post a Comment