Posts

Showing posts from April, 2022

Thiruppugazh #151 nilaiyApporuLai

Image
சூரனைத் தடிந்த வீரமூர்த்தியே!  சிவமூர்த்திக்கு உபதேசித்த தவமூர்த்தியே!  செந்திலம்பதியுறைச் செவ்வேளே!  உமது திருவடியைத் தந்தருள்வீர். நிலையாப் பொருளை யுடலாக் கருதி  நெடுநாட் பொழுது ...... மவமேபோய் நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள் நிறைவாய்ப் பொறிகள் ...... தடுமாறி மலநீர்ச் சயன மிசையாப் பெருகி மடிவேற் குரிய ...... நெறியாக மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு மலர்தாட் கமல ...... மருள்வாயே கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி குளமாய்ச் சுவற ...... முதுசூதம் குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு கொதிவேற் படையை ...... விடுவோனே அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர அழியாப் புநித ...... வடிவாகும் அரனார்க் கதித பொருள்காட் டதிப அடியார்க் கெளிய ...... பெருமாளே.

Thiruppugazh #149 ninamodu kurudhi

Image
முருகா! சிறியேனுக்குத் தகுதி இல்லையாயினும், குருமூர்த்தமாக நீரே வந்து   உபநிடதங்களின் உண்மைகளை உபதேசித்து உய்விப்பீராக. நிணமொடு குருதி நரம்பு மாறிய  தசைகுடல் மிடையு மெலும்பு தோலிவை நிரைநிரை செறியு முடம்பு நோய்படு ...... முதுகாயம் நிலைநிலை யுருவ மலங்க ளாவது நவதொளை யுடைய குரம்பை யாமிதில் நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவ ...... முயவோரும் உணர்விலி செபமுத லொன்று தானிலி நிறையிலி முறையிலி யன்பு தானிலி உயர்விலி யெனினுமெ னெஞ்சு தானினை ...... வழியாமுன் ஒருதிரு மரகத துங்க மாமிசை யறுமுக மொளிவிட வந்து நான்மறை யுபநிட மதனை விளங்க நீயருள் ...... புரிவாயே புணரியில் விரவி யெழுந்த ஞாயிறு விலகிய புரிசை யிலங்கை வாழ்பதி பொலமணி மகுட சிரங்கள் தாமொரு ...... பதுமாறிப் புவியிடை யுருள முனிந்து கூர்கணை யுறுசிலை வளைய வலிந்து நாடிய புயலதி விறலரி விண்டு மால்திரு ...... மருகோனே அணிதரு கயிலை நடுங்க வோரெழு குலகிரி யடைய இடிந்து தூளெழ அலையெறி யுததி குழம்ப வேல்விடு ...... முருகோனே அமலைமு னரிய தவஞ்செய் பாடல வளநகர் மருவி யம

Thiruppugazh #148 Edhu buddhi aiya

Image
திருத்தணிகை வேலா! நீயே எனது தந்தை. மகனாகிய என்னை ஆதரித்து அருள் புரிவாய் . ஏது புத்தி ஐயா எனக்கு? இனி      யாரை நத்திடுவேன்? அவத்தினிலே       இறத்தல் கொலோ? எனக்கு நீ ...... தந்தை தாய் என்றே இருக்கவும், நானும் இப்படியே      தவித்திடவோ? சகத்தவர்           ஏசலில் படவோ? நகைத்தவர் ...... கண்கள்காணப் பாதம் வைத்து, இடை ஆதரித்து, எனை      தாளில் வைக்க நீயே மறுத்திடில்,           பார் நகைக்கும் ஐயா, தகப்பன் முன் ......மைந்தன்ஓடிப் பால் மொழிக் குரல் ஓலம் இட்டிடில்      யார் எடுப்பது எனா வெறுத்து அழ,           பார் விடுப்பர்களோ? எனக்கு இது ...... சிந்தியாதோ? ஓதம் உற்று எழு பால் கொதித்தது      போல, எட்டிகை நீச முட்டரை           ஓட வெட்டிய பாநு சத்தி கை ...... எங்கள்கோவே! ஓத மொய்ச்சடை ஆட உற்று, அமர்      மான் மழுக்கரம் ஆட, பொற்கழல்           ஓசை பெற்றிடவே நடித்தவர் ...... தந்தவாழ்வே! மா தினைப்புன மீது இருக்கும், மை      வாள்விழிக் குறமாதினை, திரு           மார்பு அணைத்த மயூர! அற்புத! ...... கந்தவேளே! மாரன் வெற்றிகொள் பூ முடிக் குழ-      லார் வியப்பு உற, நீடு மெய்த்தவர்           வாழ் திருத்தணி மாமல

Thiruppugazh #147 thalaiyai mazhiththu

Image
தலையை மழித்து ( திருவருணை ) திருவருணை முருகா! வெளிவேடத்தால் அடியேன் படும் துயர் தீர்த்து அருள் . தலையை மழித்துச் சிவந்த துணியை யரைக்குப் புனைந்து சடையை வளர்த்துப் புரிந்து ...... புலியாடை சதிரொடு வப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து தவமொரு சத்தத் தறிந்து ...... திருநீறு கலையை மிகுத்திட் டணிந்து கரண வலைக்குட் புகுந்து கதறு நிலைக்கைக் கமர்ந்த ...... எழிலோடே கனக மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற் றறிந்து கவலை யொழித்தற் கிரங்கி ...... யருள்வாயே அலைகட லிற்கொக் கரிந்து மருவரை யைப்பொட் டெறிந்து மமரு லகத்திற் புகுந்து ...... முயரானை அருளொடு கைப்பற்றி வந்து மருண கிரிப்புக் கிருந்து மறிவு ளபத்தர்க் கிரங்கு ...... மிளையோனே மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து வறிது நகைத்திட் டிருந்த ...... சிவனார்தம் மதலை புனத்திற் புகுந்து நரவடி வுற்றுத் திரிந்து மறம யிலைச்சுற் றிவந்த ...... பெருமாளே.