Thiruppugazh lyrics Vedha verpile

வேதவெற்பிலும் தினைப்புனத்திலும் வாழும் அழகரே! 
வள்ளி மணவாளரே! 
சிவனாருக்கு ஒரு மொழி யுரைத்த குருபரரே! 
அடியேனுக்கு நல்லறிவைப் புகன்று ஆட்கொள்வீர்.

வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம
வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய

ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி ...... புயநேய
ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி ...... புகல்வாயே

காது முக்ர வீர பத்ர காளி வெட்க ...... மகுடாமா
காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி ...... யிமையோரை

ஓது வித்த நாதர் கற்க வோது வித்த ...... முநிநாண
ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த ...... பெருமாளே.




################################

vEdha veRpilE punaththil mEvi niRkum ...... abirAma 
vEdu vacchi pAdha padhma meedhu checchai ...... mudithOya

Adhariththu vELai pukka ARiratti ...... buyanEya
AdharaththodA dharikka Ana budhdhi ...... pugalvAyE

kAdhu mugra veera badhra kALi vetka ...... makudAm
AkAsa mutta veesi vitta kAlar baththi ...... imaiyOrai

Odhuviththa nAdhar kaRka Odhuviththa ...... muni nANa
Orezhuththil ARezhuththai Odhuviththa ...... perumALE.

Comments

Popular posts from this blog

Chinmaya Sarveshwara prays for Universal Wellness

Thiruppugazh - Kaithala-nirai-kani - கைத்தல நிறைகனி

Interview with Gurudev - David snow

Thiruppugazh samarppanam - song selection